Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உப்பு உப்பு.. தப்பு தப்பு.. உப்பை தப்பு தப்பா போட்டால்.. அடேங்கப்பா இவ்வளவு ஆபத்தா.. ஜாக்கிரதை மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய உணவுக்கு அடிப்படை சுவையை கொடுப்பதற்கு காரணமே உப்புதான்... ஆனால் எந்த அளவுக்கு உப்பு சுவையை தருகிறதோ, அந்த அளவுக்கு கெடுதலும் உள்ளது.. உப்பின் அளவு அதிகரித்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் தொந்தரவு தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதாவது, சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரையின் தீமை பற்றியும் அடிக்கடி சொல்கிறோமே தவிர, சத்தமில்லாமல் பலரது உயிரைகொல்லும் ஆபத்து இந்த உப்பில் உள்ளது என்பதே உண்மை.

உணவுகளை பதப்படுத்த அவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்படுவது வழக்கம்.. அதனால்தான், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடவே கூடாது என்கிறார்கள்.. காரணம், இவை வயிற்று புற்றுநோயை உண்டாக்க கூடியது. அதாவது, உடல் பருமனோடு அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருந்தால் அது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

Health tips: does your food contain salt reducing life quickly and what are the facts

கருவாடு, ஊறுகாய்: அதேபோன்று சூப், ஊறுகாய், கருவாடு, அப்பளம் போன்றவைகளில் உப்பு அதிகம் சேர்க்கப்படுவதால் தவிர்ப்பதும் நல்லது.. உணவில் உப்பை அதிகம் சேர்த்தால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்... ஏற்கனவே சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இன்னும் குறைவாகவே தேவைப்படும்... உப்பு அதிகரித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பில் உள்ள அதிக சோடியமானது, உடலில் உள்ள ரத்த ஓட்டத்திற்கு கொண்டுவந்து, அதன்மூலம் ரத்தத்தில் தண்ணீரின் அளவு அதிகமாகி அதன்மூலம் அழுத்தம் அதிகரித்துவிடும்..

ரத்த அழுத்தம் அதிகமாவதால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறு ஏற்படலாம். அதிக உப்பால் ரத்த நாளத்தின் உள்சுவரில் கொழுப்பு படிவதால் உள்சுவரின் செயல்திறன் குறைகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர்.

சிறுநீரகக்கல்: உணவிற்காக எடுக்கும் உப்பு அளவை பாதியாக குறைத்தால் அனைவருக்குமே நல்லது.. இல்லாவிட்டால், வயிற்றுப்புண், இருதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் நோய் ஏற்படும். எலும்பின் அடர்த்தியும் குறையும். யூரியா மற்றும் யூரிக் ஆசிட் போன்ற அமிலமும் அதிகரிக்கும். உடலில் நாளமில்லா சுரப்பிகள் தூண்டிவிட்டு சிறுநீரகங்கள், சிறுநீரை வெளியேற்றும் பணியை குறைக்கும். இதனால் உடலில் நச்சு நீர் வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தேங்கிவிடும். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உறிஞ்சி விடும்.

உடல் உழைப்பு இருக்கும்போது அதிகப்படியான உப்பு வியர்வை வழியாக வெளியேறி உப்பு தேவைக்கு ஏங்கி இருக்கும். ஆனால் உடல் உழைப்பும், வியர்வையும் இல்லாத சூழலில் உப்பு சேரக்கூடாது. ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும்.

Health tips: does your food contain salt reducing life quickly and what are the facts

வார்னிங் : சமீபத்தில் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனமானது, ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்தபடியே இருப்பதாலும், சிறுநீரக தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் தற்போது அதிகமாகி வருவதாலும், உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உப்பு எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது என்கிற ஆய்வை மேற்கொண்டனர்.. அந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் உப்புவை மக்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.. அதனால்தான், உப்பை டபுள் மடங்காக மடங்கு எடுத்துக்கொள்கிறார்கள்.. இதன் காரணமாக இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றதாம்.. எவ்வளவு உப்பை நாம் எடுத்து கொள்ள வேண்டும், எவ்வளவாக குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்

Health tips: does your food contain salt reducing life quickly and what are the facts

எச்சரிக்கை: அதன்படி உலக அளவில் சீன மக்கள்தான் அதிக அளவு உப்பை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு வெறும் 5 கிராம் உப்பை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 5 கிராம் என்பது வெறும் ஒரு டீஸ்பூன் அளவு உப்புதான். இந்தியா இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தில் இருக்கிறது. வீட்டில் பயன்படுத்தும் உப்பைவிட, ஓட்டல்களில் செய்யப்படும் உணவுகளில் சோடா உப்பு அதிகம் கலக்கப்படுகிறது.. அதனால், வீட்டு உணவுகளை மட்டும் சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆயுள் குறைவு: உப்பை எந்த அளவு அதிகம் உணவில் சேர்க்கிறோமோ அந்த அளவு மரணம் நம்மை நெருங்குகிறது. அதிக உப்பு மனிதனின் ஆயுளைக் குறைக்கும், உணவில் கூடுதல் உப்பைச் சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறக்கின்றனர். நமக்கு சோடியம் தேவைதான். ஆனால், நமக்குத் தேவையான சோடியம் இயற்கைக் காய்கறிகளில் இருந்தே கிடைத்துவிடும். தனியாக உப்பு என்ற பெயரில் சோடியம் தேவையேயில்லை என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+