இனிப்பா.. சிவப்பா..! ரோட்டோர தர்பூசணியில் கேன்சர் ஆபத்து..அதென்ன எரித்ரோசின்? எப்படி கண்டுபிடிப்பது?
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் எட்டு டன் தர்பூசணி பழங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கின்றனர்.
சரி தர்பூசணி பழங்களில் ரசாயன கலப்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில் மக்கள் குளிர்பானங்கள் பழங்கள் ஆகியவற்றை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் சாலையோரங்களில் தர்பூசணி, கரும்பு ஜூஸ், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

வெயில் நேரங்களில் பயணம் செய்பவர்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மொத்தமாக தர்பூசணி பழங்களை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தர்பூசணி பழங்களை பொறுத்தவரை பார்க்க பெரிதாக சிவப்பாக இருந்தால் தான் வாடிக்கையாளர்கள் அதனை வாங்கி சாப்பிடுவார்கள். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு சில வியாபாரிகள் தர்பூசணி பழங்களின் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி செயற்கையாக இனிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஊட்டி மக்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மொத்தம் ஏழு கடைகளில் ஆய்வு செய்ததில் மூன்று கடைகளில் இரசாயன ஊசி செலுத்திய தர்பூசணி பழங்கள் விற்பனை செய்து வந்தது. மேலும் இனிப்புக்காகவும் சில இரசாயனங்கள் கலந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்றும் தனியே விசாரணை நடத்தி வருகின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
இதற்கிடையே, ரசாயன கலப்பு கொண்ட தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து மற்றும் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொதுவாக தர்பூசணி பழங்களின் சுவையை பார்க்காமல் நிறத்தை பார்த்து அதிக பேர் வாங்குகிறார்கள். இதற்காக சில வியாபாரிகள் ரசாயனயங்களை ஊசி மூலம் செலுத்துகின்றனர், குறிப்பாக் தர்பூசணியில் எரித்ரோசின் என்ற கெமிக்கலை பயன்படுத்துகிறார்கள். ஊசி மூலம் தர்பூசணி பழங்களில் இவற்றை ஏற்றும்போது அவை சிகப்பு நிறமாக மாறுகிறது.
இதனால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளை பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதன் நிறம் மூலம் ஈர்த்து அதனை வாங்கி சாப்பிடுகிறார்கள். மேலும் இனிப்பு சுவைக்காகவும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு இரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை சாப்பிடும்போது காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை ஏற்படலாம். ரசாயனத்தால் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு செரிமான கோளாறு நெஞ்செரிச்சல் போன்றவை உடனடியாக ஏற்படும். எனவே தர்ப்பூசணி பழங்களை வாங்கும் முன்பு அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வாங்கி சென்றாலும் தர்பூசணி பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுடு தண்ணீரில் போட்டால் அதிலிருந்து நிறம் பிரிந்து செல்லும். அப்படி இருந்தால் அது கலப்படம் அல்லது ரசாயன கலப்பு கொண்ட பழம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொள்ளும். அப்படி இருந்தாலும் அது இரசாயன கலப்பு கொண்ட பழம் தான். எனவே பழங்களை வாங்கிச் செல்லும் போது நிச்சயம் இதுபோன்ற சோதனைகளை செய்து பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications