கொஞ்சம் லேட்டானாலும் உயிர் போயிடும்! நாய்க்கடியை சாதரணமாக நினைக்க கூடாது! மக்களுக்கு பறந்த வார்னிங்
சென்னை: கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்த போதும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ரேபிஸ் நோய் தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதுமே ராபிஸ் நோய் பாதிப்பு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நோய் பாதிப்பு மனிதர்களுக்கு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அடிக்கடி நடக்கும் நாய்க்கடி சம்பவங்களால் மக்கள் கடும் இன்னலில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடு இன்றி சுற்றித் திரியும் தெருநாய்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி ஒன்றுகூடி தாக்குகின்றன.

சென்னை போன்ற நகரங்களில் அடிக்கடி சிறுவர் சிறுமியர் நாய் கடி சம்பவத்தால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது நாய்களைப் பிடித்து அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தெருக்களிலேயே விட்டு விடுகின்றனர். அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டாலும் நாய்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாய்க்கடியால் ரேபிஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதிர்ச்சி தரும் விதமாக கேரளாவில் நாய் கடித்தால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இது போன்ற மரணங்கள் தமிழகத்தில் நிகழக் கூடாது என்பதற்காக, தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகம் அரசு மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பொதுசுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், "நாய்க்கடிக்கு பிறகு சரியான முறையில், உரிய நேரத்தில் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) செலுத்தப்படாவிட்டால், மரணம் நிச்சயம். தாமதமாக சிகிச்சை பெறுவது அல்லது தடுப்பூசி போடுவதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாய் கடித்த உடனே அந்த இடத்தை சரியாக கழுவ வேண்டும். கேரளாவில் நடைபெற்ற சம்பவத்திற்கு காலதாமதமே காரணம்.
சரியான முறையில் காயத்தை சுத்தம் செய்யாததும், தாமதமாக தடுப்பூசி போட்டதுதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் நாய்க்கடி வகைகளை துல்லியமாக பிரித்து இருந்து சிகிச்சை வழங்க வேண்டும். மொத்தம் நாய்க்கடி மூன்று வகைப்படும். அதில் சதைகளில் காயம் ஏற்படாமல் நாய் முத்தமிடுவது, அல்லது நக்குவது போன்ற நிகழ்வுகளை சிகிச்சை தேவையில்லை.
அதே நேரத்தில் லேசான காயம், சுறுசுறுப்புகள் இருந்தால் ராபிஸ் தடுப்பூசியை அவசியம் போட வேண்டும். ரத்தம் வெளியாகும் படி சதைகளில் காயம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக ஏஆர்வி, ஆர்ஐஜி இரண்டு சிகிச்சைகளையும் எடுக்க வேண்டும். முக்கியமாக, நாய்க்கடிக்கு உடனே சோப்பாலும் நீராலும் குறைந்தது 15 நிமிடம் காயங்களை கழுவுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இது வைரசை உடனடியாக அழிக்கக்கூடிய முதல் கட்ட நடவடிக்கை.
இளம்பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதால், பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் இந்த வழிகாட்டல்களுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும்" என அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications