முடக்கிப் போடும் ஸ்ட்ரோக்.. தப்புவது எப்படி.. நரம்பியல் அறுவை சிகிச்சை துறை டாக்டர் கூறும் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் ஏற்படுகிறது. பக்கவாத அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர மருத்துவ சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும் அக்டோபர் 29ஆம் உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முன் கூட்டியே கண்டறிந்து எப்படி தப்பிப்பது என்று அறிவுறுத்தியுள்ளார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர். ரூபேஷ்.

MoyaMoya syndrome stroke How to escape Neurosurgery department doctors advice

இதயநோய், புற்று நோயைப் போலவே ஆபத்தான இன்னொரு நோயும் இருக்கிறது. உடலில் எந்த ஊனமும் இல்லாமலேயே படுத்த படுக்கையாக்கிவிடும் கொடிய நோய் பக்கவாதம். ஆண்டுக்கு சுமார் ஆறு கோடி பேரை இது முடக்கிப் போடுகிறது. ஓர் ஆண்டில் சராசரியாக ஒன்றரை கோடிப் பேர் இந்த நோய்க்குப் பலியாகிவிடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய் இது. இதை மூளைத் தாக்கு அல்லது ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். முன் அறிகுறிகள் எதுவுமின்றித் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என்கிறார்கள்.

மோய மோயா சிண்ட்ரோம் என்ற சொற்றொடர் ஜப்பானிய மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். "a puff of smoke" என்ற ஆங்கில சொற்றொடருக்காக இது பயன்படுத்தப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு அரிதானதாக இருப்பினும், வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய திறன் கொண்டதாக இது இருக்கிறது. மருத்துவ விழிப்புணர்வு உலகில் இன்னும் சரியாக கவனம் செலுத்தப்படாத ஒன்றாகவே இது தொடர்கிறது.

அநேக நேரங்களில் நோயறிதலின் போது கை, கால் வலிப்பு, வலிப்பு தாக்கம் அல்லது நடத்தைசார் சீர்கேடுகள் என தவறாக கணிக்கப்படும் இப்பாதிப்பு பிராதனமாக இளம் குழந்தைகளை பாதிக்கிறது; எனினும் வயதுவந்த பெரியவர்களிடமும் இது வெளிப்படக்கூடும். பெரிய அளவிலான/தீவிர பக்கவாதம் ஏற்படாமல் தவிர்ப்பதில் அல்லது அதன் தீவிர பாதிப்பை தடுப்பதில் இந்நோய் நிலையை ஆரம்பத்திலேயே சரியாக கண்டறிவது மிக முக்கிய பங்காற்றும்.

மோய மோயா சிண்ட்ரோம் என்ற பெயர், இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளின் ஆஞ்சியோகிராமின் போது உருவாக்கப்படுகிற ஒரு தனித்துவமான, வித்தியாசமான உருவத்தின் காரணமாக வந்ததாகும். மூளையில் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்கின்ற நிலையில், அவற்றை ஈடு செய்வதற்கு சிறிய, மெல்லிய இரத்த நாளங்கள் சிக்கலான கிளைகள் போல உருவாகி "புகை மண்டலம் போல" தோற்றமளிப்பதன் காரணமாகவே இப்பெயர் அதற்கு சூட்டப்பட்டிருக்கிறது.

இது குறித்து விபரமாக விவரிக்கிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர். ரூபேஷ், மோய மோயா சிண்ட்ரோம் உள்ள சிறார்களுக்கு பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல சிறிய ஸ்ட்ரோக்குகள்/பக்கவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பாதிப்புக்கு ஆளானவர்கள் திடீரென கீழே சரிந்து விழக்கூடும் பலவீனம் ஏற்படலாம் அல்லது பேசும்போது, அதுவும் குறிப்பாக அவர்கள் அழும்போது சிரமங்களை வெளிப்படுத்தலாம். உடனடியாக இப்பாதிப்பு நிலையை சரியாக கண்டறிவதில் தான் முக்கிய சவால்கள் இருக்கிறது. ஏனெனில் இந்த அறிகுறிகள் பிற நோய்கள் போல தோற்றமளிப்பதால் எளிதாக குழப்பம் ஏற்படுத்தக் கூடியது. மேலும் மோய மோயா நிலை தொடர்பான விழிப்புணர்வு இன்னும் மிக குறைவாகவே இருக்கிறது" என்று விளக்கமளித்தார்.

இளம் சிறார்களிடம் பொதுவாக காணப்படுகின்ற போதிலும், ஒரு வயது என்ற ஆரம்ப நிலையிலும் சில அறிகுறிகள் தோன்றக்கூடும். மோய மோயா சிண்ட்ரோம் வயதான பெரியவர்களையும் பாதிக்கக்கூடும். முழுமையாக முடக்கி போடக்கூடிய பக்கவாதம் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் வராமல் தடுப்பதற்கு எச்சரிக்கை அடையாளங்களை சரியாக கண்டறிவதும் மற்றும் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெறுவதும் மிக முக்கியம்.

மூளையில் இரத்த நாளங்களை காட்சிப்படுத்தும் ஒரு நோயறிதல் வழிமுறையான ஆஞ்சியோகிராம், மோய மோயா சிண்ட்ரோம் - ஐ அடையாளம் காண்பதற்கு முதன்மையான வழிமுறையாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே இப்பாதிப்பு கண்டறியப்படுமானால் பெரிய பக்கவாத ஆபத்தை தவிர்க்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கை தரத்தை அதன் மூலம் மேம்படுத்த இயலும்.

ஒரு பெரிய மருத்துவ சவாலாக திகழும் மோய மோயா சிண்ட்ரோம் க்கு பொதுமக்கள் மத்தியிலும் மருத்துவ சமூகத்தினர் மத்தியிலும் அதிக விழிப்புணர்வும், புரிதலும் அவசியமாக இருக்கிறது. இப்பாதிப்பு நிலையின் சிக்கல்களை தீர்க்க மருத்துவ சமூகம் தொடர்ந்து முயற்சிக்கின்ற நிலையில் "புகை மண்டலம்" போன்ற ஸ்ட்ரோக்குகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு சிறப்பான எதிர்காலத்திற்கு தொடக்க நிலையிலேயே செய்யப்படும் நோயறிதலும், இடையீட்டு சிகிச்சையும் நம்பிக்கையை தருகின்றன என்கிறார் டாக்டர் ரூபேஷ்.

MoyaMoya syndrome stroke How to escape Neurosurgery department doctors advice

பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதிப்படைவது குறைகிறது. இதனால் ஏற்படும் ஊனமும் குறையக்கூடும். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதம் பேர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் திரும்ப முடியும் என்று நம்பிக்கை அளிக்கின்றனர் மருத்துவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+