Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடி கொட்டுதா? தப்பி தவறியும் மாத்திரை சாப்பிட வேண்டாம்! பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் அரிய நோய்

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது, முடி உதிர்வை தடுக்கும் மருந்துகளை பயன்படுத்துவோரின் குழந்தைகளுக்கு மிகவும் அரிதான ஒரு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

இந்த காலத்தில் இளைஞர்கள் தொடங்கி பலரும் எதிர்க்கொள்ளும் பிரச்சினை முடி உதிர்வது. வாழ்க்கை முறை மாற்றம், அதிக கெமிக்கல் உள்ள நீர் காரணாக முடி கொட்டும் பிரச்சினை அதிகரித்துள்ளது.

spain

அதைத் தடுக்க இப்போது இளைஞர்கள் பலரும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே ஸ்பெயினில் உள்ள நவர்ரா பார்மகோவிஜிலன்ஸ் மையத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதாவது கடந்த ஆண்டு ஸ்பெயின் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழந்தைகளிடையே வேர்வூல்ஃப் சிண்ட்ரோம் என்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வேர்வூல்ஃப் சிண்ட்ரோம் என்பது உடலின் அசாதாரண இடங்களிலும் அதிகப்படியான முடி வளர்வதே இந்த வேர்வூல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பாகும். மிகவும் அரிதான இந்த நோய் எப்படி திடீரென 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது முடி உதிர்வதை தடுக்கும் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் குழந்தைகளுக்கே இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது யாரெல்லாம் மினாக்ஸ் என்ற கெமிக்கலை கொண்ட மருந்தை பயன்படுத்தினார்களோ அவர்களின் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருந்துள்ளது. இந்த மினாக்ஸ் எதிர்பாராத விதமாக உடலில் சென்றுவிட்டதால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மினாக்ஸ் என்பது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்தாகும். வயதானோருக்கு முடி உதிர்வதை தடுக்க இந்த மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்தை பயன்படுத்த மருத்துவரின் பரிந்துரை சீட்டு எதுவும் தேவையில்லை. இதனால் பலரும் இந்த மருந்தை பயன்படுத்துவார்கள். இந்தச் சூழலில் தான் இந்த மருந்து அடுத்து தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது குழந்தைகளிடையே கண்டறியப்பட்டுள்ள "வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்" பாதிப்பு காரணாக உடலின் அசாதாரண பகுதிகளிலும் கூட அதிகப்படியான முடி வளரும். முகம், கைகள் மற்றும் உள்ளிட்ட உடல் பாகங்களில் இதனால் 5 செமீ வரை முடி வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை இந்த பாகிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை.. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஷேவிங் மற்றும் வாக்சிங் போன்ற வழக்கமான முடி அகற்றும் முறைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இது சரியாக இருக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு அதுவும் பிறந்து ஓரிரு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைகளுக்கு இதுபோல முடியை அகற்ற முடியாது என்பதால் குழந்தைகளின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் பகிவாகி இருந்தது. அதில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் அளித்து வந்த நிலையில், அந்த குழந்தையும் இதே "வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்" ஏற்பட்டது.. மருத்துவர்கள் விசாரித்த போது குழந்தையின் தந்தை இதே முடி கொட்டுவதை தடுக்கும் மினாக்ஸ் மருந்தை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. தந்தை மினாக்ஸ் மருந்தை நிறுத்திய உடனேயே குழந்தையின் பாதிப்பு நின்றது. அதீத முடி வளர்ச்சி நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+