"தெய்வம் தந்த வீடு” சீரியல் மோனிகாவா இது? லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒரு காலத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த "தெய்வம் தந்த வீடு" சீரியல் நடிகை மோனிகாவின் லேட்டஸ்ட் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெண்கள் மற்றும் சோகத்தில் இருப்பவர்களுக்கு அட்வைஸ் செய்வதுபோல பல ரீல்ஸ்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் அட இது நம்ம மோனிகாவா என்று பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய மோனிகா தனது இயல்பான பேச்சு, சிரிப்பு, காமெடியால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு கே. பாலச்சந்தர் தயாரித்த அபூர்வ ராகங்கள் சீரியலில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த சீரியலில் நடித்தது மூலம் குடும்ப ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை

அந்த சீரியலின் செல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அந்த சீரியல் கதாநாயகி சீதாவை ஆரம்பத்தில் கொடுமைப்படுத்தும் கேரக்டரை பார்த்து இவரை திட்டாதவர்களே இல்லை. பிறகு அந்த சீரியலில் இவர் மனம் மாறி நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார். அதனால் அந்த சீரியலுக்குப் பிறகு இவரை ரசிகர்கள் தேடி வந்தனர்.

Monika Deivam Thandha Veedu Vijay TV Tamil Serial Chinnathirai

தொகுப்பாளினி மோனிகா

விஜய் டிவியில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி, ரோஜா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார். அதோடு மானாட மயிலாட, சூப்பர் மாம், மிஸ் சின்னத்திரை போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் சீரியல்களில் பிஸியாக இருந்த மோனிகா திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார்.

Monika Deivam Thandha Veedu Vijay TV Tamil Serial Chinnathirai

சூப்பர் மாம் நிகழ்ச்சி

மோனிகாவிற்கு ஒரு மகனும் இருக்கிறார். அந்த மகனுடன் தான் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு பேட்டியில் கூட, என்னுடைய கணவர் ஆதரவு இல்லாமல் நான் மீண்டும் நடிக்க வந்திருக்க முடியாது. குழந்தையை கவனிக்க வேண்டிய சூழலில் தெய்வம் தந்த வீடு சீரியலில் நடிக்க என்னை மோட்டிவேட் பண்ணுனது அவர்தான் என்று சொல்லி இருந்தார். இப்ப வரைக்கும் தன்னுடைய குடும்பம் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ரசிகர்கள் கருத்து

ஆனால் சமீபத்தில் சில வருடங்களாக அவரை எந்த டிவி நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தான் அவர் இப்போது சோசியல் மீடியாவில் ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். மீண்டும் அவரை பார்த்த ரசிகர்கள் மோனிகா கொஞ்சம் கூட மாறலையே? மீண்டும் சீரியலில் நடிக்க வாங்க, 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தொகுப்பாளர் மீண்டும் வந்துட்டாங்க என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட நடிகை சுமித்ராவின் மகள் எப்படி இருக்கிறார்? உமா சங்கரிக்கு குவியும் ஆறுதல்
பல வருடங்களாக சின்னத்திறையில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை என்பதற்கு இந்த வைரல் வீடியோக்களே சாட்சி. அதனால் தான் மோனிகா மீண்டும் நடிப்புக்கு வருவாரா? சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுப்பாரா? என்ற கேள்விகளும் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+