கேன்சரால் பாதிக்கப்பட்ட நடிகை சுமித்ராவின் மகள் எப்படி இருக்கிறார்? உமா சங்கரிக்கு குவியும் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த நடிகை சுமித்ராவின் மகளான உமா சங்கரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சோசியல் மீடியாவில் பதிவு வெளியிட்டிருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்த நிலையில் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

நடிகை சுமித்ராவின் மூத்த மகளும் சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்தின் தங்கச்சியாக நடித்த நடிகையுமான உமா சங்கரி தனக்கு ஆரம்ப கட்ட மார்பக புற்றுநோய் இருப்பதை சில நாட்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.

Uma Shankari Sumithra Vijayakanth Sokkathangam Breast Cancer

நடிகை உமா சங்கரி பதிவு

உமா சங்கரி வெளியிட்ட பதிவில், "ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில நாட்கள் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் தொடர்ந்து போராடுகிறேன். உங்கள் அன்பும், பிரார்த்தனையும் எனக்கு மிகப்பெரிய பலம்" என்று நம்பிக்கையான வார்த்தைகளை அதில் பகிர்ந்து இருந்தார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் சொல்ல தொடங்கி விட்டனர்.

ரியாஸ்கானுக்கு விருது கொடுக்கல.. நந்தினி சீரியலுக்காக பட்ட கஷ்டம்! உமா ரியாஸ்கான் வருத்தம்
நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். எங்கள் பிரார்த்தனை உங்களுடன்... என்று தொடர்ந்து உற்சாகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 90ஸ் ரசிகர்கள் "மரகதம் சீக்கிரம் திரும்பி வாங்க. விஜயகாந்த் தங்கச்சி இப்படி கஷ்டப்படக்கூடாது" என்று எமோஷனலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

Uma Shankari Sumithra Vijayakanth Sokkathangam Breast Cancer

சீமான் படத்தில் அறிமுகம்

சீமான் இயக்கிய வீரநடை படத்தில மூலம் தமிழ் சினிமாவில் உமாசங்கரி அறிமுகமானார். அதற்குப் பிறகு வானவில், கடல் பூக்கள், சொக்கத்தங்கம், தென்றல், சூரி, கோவை பிரதர்ஸ் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு 2006இல் துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். சின்னத்திரையில் வள்ளி என்ற சீரியலிலும் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவரை காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Uma Shankari Sumithra Vijayakanth Sokkathangam Breast Cancer

ரசிகர்களின் பிரார்த்தனை

காரணம் சில நடிகைகள் மட்டும்தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார்கள் அதில் உமா சங்கரியும் ஒருவர். அவர் நடித்த படங்களில் அதிகமாக கவர்ச்சியாக நடிக்காமல், கண்களாலேயே தனது வார்த்தைகளை சொல்லிவிடும் மாயாஜாலகாரர். ஆனால் இப்போது அவர் சந்தித்துக் கொண்டிருக்கும் சோகமான காலகட்டம் சீக்கிரமாக முடிவுக்கு வரவேண்டும், அவர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும், அவருடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது பலருடைய பிரார்த்தனையாக இருக்கிறது.

சிம்பு எப்படிப்பட்டவர் தெரியுமா? உண்மையான கேரக்டர் இதுதான்! ஓபனாக பேசிய பெப்சி உமா
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினியாக நடித்து பிறகு அவருடன் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கே அம்மாவாக நடித்து பலரையும் அழ வைத்த நடிகை சுமித்ரா இன்று தன்னுடைய மகள் புற்றுநோயுடன் போராடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ரசிகர்களையும் உருக வைத்திருக்கிறது. சுமித்ரா அஜித் நடித்த வலிமை படத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் வரவில்லை இதனால் அவர் எப்படி இருக்கிறார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் உங்களுடைய மகளை பத்திரமாக பாத்துக்கோங்க என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+