இட்லிக்கு ஊற வைக்கறீங்களா? இதை 2 ஸ்பூன் சேருங்க.. புஸ் புஸ்ஸுன்னு இட்லி கிடைக்கும்.. சூப்பர் டிப்ஸ்

பாசிப்பருப்பு சேர்த்து அரைத்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்... எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த பாசி பருப்பினை தவறவிடக்கூடாது. இட்லிக்கு மாவு அரைக்கும்போது, சாதாரண உளுந்துக்கு பதில், கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.
மென்மை இட்லி: இட்லி மென்மையாக வரவேண்டுமானால், மாவு அரைக்கும் பக்குவம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.. இட்லிக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிடக்கூடாது.. அதேபோல மாவு கெட்டியாகிவிடக்கூடாது.. அதேபோல உளுந்து அதிகமாகிவிடவும்கூடாது, குறைவாகிவிடவும் கூடாது, இதனால், இட்லி கெட்டியாகிவிடும்.
எப்போதுமே அரிசி மாவு மட்டும் புளித்தால், போதும். உளுந்தப்பருப்பு மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. மாவு எவ்வளவு புளித்திருக்கிறதோ, அந்த அளவுக்கு இட்லிகள் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும் கிடைக்கும்..
பேக்கிங் சோடா: எனவே, இட்லி அவிப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு, உளுந்து ஊறவைத்து எடுத்து கொள்ளலாம். இதனால், இட்லி பஞ்சு போல கிடைக்கும். வழக்கமாக பேக்கிங் சோடா சேர்ப்பார்கள், ஆனால் அதற்கு பதிலாக ஒரு கப் அவலை ஊறவைத்து, விழுதாக நன்றாக அரைத்து, இட்லி மாவுடன் கலந்து இட்லி சுட்டாலும் மென்மையாக வரும்...
அதேபோல, இட்லிக்கு ஊறவைக்கும்போது சிறிது பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கலாம்.. உதாரணத்துக்கு, இட்லி அரிசி 4 டம்ளர் என்றால், 2 ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.. அதேபோல, 1 கிளாஸ் உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
2 ஸ்பூன்: இட்லி + பொட்டுக்கடலையும், உளுத்தப்பருப்பு + வெந்தயத்தையும் தனித்தனியாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது இரண்டையும் ஒன்றாக கலக்கி 8 மணி நேரம் புளிக்க வேண்டும். இந்த மாவில் இட்லி வார்க்கும்போது, இட்லி பஞ்சுபோல வரும்.. அதுமட்டுமல்ல, பொட்டுக்கடலை உள்ளதால், நான்கைந்து நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து இந்த மாவை பயன்படுத்தலாம்..
மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிவிட்டாலோ அல்லது தண்ணீர் அதிகமாகிவிட்டாலோ சிறிதளது சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து அதை இட்லி மாவில் ஊற்றி கரைத்தால், இட்லி மென்மையாக வரும்.
உளுந்து மாவு: ஒருவேளை, இட்லி மாவில் உளுந்து குறைவாகிவிட்டால், அப்பளத்தை தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து விடலாம். இதனால் ருசியும் நன்றாக இருக்கும், இட்லியும் மென்மையாக வரும்... சிலசமயம், மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால், அதில் சிறிது ஐஸ் வாட்டரை ஊற்றி கரைத்து இட்லி ஊற்றினால், மென்மையான இட்லி கிடைக்கும்.
பஞ்சு மாதிரி: அதேபோல, உளுந்து அரைத்து மாவை வழித்தெடுக்கும்போது பஞ்சு போல வரவேண்டும். ஆனால், அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும். அரிசி அரைக்கும்போது அன்றைய தினம் வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் இட்லி இன்னும் சாப்ட் ஆக கிடைக்கும்... இரண்டு மாவைவும் கைகளால் நன்றாக கலந்து, இரவு முழுவதும் புளிக்க விட்டாலே மிருதுவான இட்லியை பெறலாம்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications