மருதாணியின் மகத்துவம்.. மூலிகையே மருந்து.. தலைக்கு மருதாணி.. தலையணைக்கு மருதாணி.. மகத்துவம் மருதாணி
சென்னை: வெறும் அழகுக்காகவே பயன்படுத்தப்படும், மருதாணி இலைகளின் மருத்துவ பயன்கள் அபாரமானவை.. ஆச்சரியம் தரக்கூடியவை. என்னென்ன தெரியும்?
நரம்புகளின் செயல்பாட்டை தூண்டக்கூடியது மருதாணி இலைகள். நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இதனால், உடம்பின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராகின்றன.. உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் வலுவாகின்றன..

சர்க்கரை நோயாளிகள்: அதிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும் என்பதால், காலில் சரியான ரத்த ஓட்டமும் இருக்காது. அத்துடன், பாதங்களில் ஒருவித எரிச்சலும், குடைச்சலும் ஏற்படும்.. இதற்கும் தீர்வு தருகிறது மருதாணி. கை மற்றும் கால் விரல்களிலும், பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் இந்த இலையை அரைத்து தடவும்போது, ரத்த ஓட்டம் சீராகின்றன..
உடலுள்ள பித்தத்தை மொத்தமாக நீக்கிவிடும் இந்த இலைகள். பித்தம் அதிகமானால் மனநிலை சிதறல், மனநோய் போன்றவை ஏற்படாமல் இந்த இலைகள் தடுத்துவிடும்.. ரத்தமும் சுத்திகரிப்பாகும். மருதாணி இலைகளை, வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிப்பாகும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்..
குளிர்ச்சி இலைகள்: கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கிருமிகள், நச்சுக்கள் நம்முடைய உடலில் இருக்கலாம். அத்தனையையும் இந்த மருதாணி இலைகள் விரட்டிவிடும். அதனால்தான், நகசுத்தி வந்தால், இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைப்பார்கள்.. சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி இதுபோன்ற பிரச்சனைகளுக்கும், மருதாணியுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டி வைப்பார்கள்.
மருதாணி இலைகளை போலவே, மருதாணியின் மலர்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. நிம்மதியான தூக்கம் வராமல் போனால், இந்த பூக்களை, ஒரு வெள்ளை துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டால், ஆழ்ந்த தூக்கம் வருமாம்.
மருதாணி வேர்கள்: மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு ஏற்படுத்தக்கூடியது இந்த இலைகள்.. மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குணமாகும்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கும்போது, நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும். அப்பொழுது முடியில்லாத குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கிறார்களாம்.
மருதாணி விதைகள்: மருதாணி விதையில் உள்ள எண்ணெய்யை உடம்பின் மீது தடவி வந்தால், உடலில் எரிச்சல் தணிந்து விடும்.. பித்தம் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நோயை போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. மருதாணி இலை குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், இதனுடன் நான்கைந்து நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.
கை காலில் எரிச்சல் இருந்தால், மருதாணி இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை, கால்களிலும் உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தாலே போதும்.. அதேபோல, மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து கால் வெடிப்புகளில் தேய்த்து வரலாம். நரை முடியை மறைப்பதற்கு மருதாணிபேக் போட்டு குளிக்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications