யார், யாருக்கெல்லாம் பூவன் பழம் நல்லது தெரியுமா? பூவன் வாழைப்பழத்தின் வியப்பூட்டும் நன்மையை பாருங்க
சென்னை: இதய நோய்களை வராமல் தடுக்கக்கூடிய பூவன் வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?
பூவன் பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன..

பொட்டாசியம்: வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக இருக்கும் என்றாலும், இந்த பூவன் பழத்தில் சற்று அதிகமாவே உள்ளது எனலாம். அந்தவகையில், இந்த பூவன் பழத்தை தினமும் சாப்பிடலாம். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த சாய்ஸ் இந்த பூவன் பழங்கள்..
தினமும் பூவன் பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு நிறைவான தூக்கம் கிடைக்கும்.. அதேபோல, தினமும் பூவன் பழம் சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை.
வேறு எந்த வாழைப்பழத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த பூவன் வாழைப்பழத்தில் உள்ளது.. அது என்ன தெரியுமா? டென்ஷனை விரட்டி, மன மகிழ்ச்சியை தரக்கூடியதாம் இந்த பூவன் பழங்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? பூவன் பழத்தில் செரோடோனின் என்ற ஹார்மோன்தான் இந்த சிறப்பு பண்பினை தருகிறது.
குடல் இயக்கம்: அதேபோல, மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாகவும், குடல் இயக்கம் சீராக செயல்படவும் இந்த பூவன் பழங்கள் உதவுகின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பயங்கர நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.. இதனால், இதய நோய்களும் லேசில் நெருங்குவதில்லை.. அதிக இரும்புசத்துக்கள் பூவன் பழத்தில் உள்ளதால், அனீமியா பிரச்சனையை சரிசெய்கிறது..
செரிமான தூண்டுதலை அதிகப்படுத்தும் சக்தி இந்த பூவன் பழங்களுக்கு உள்ளது.. அதனால்தான் மலச்சிக்கல் உள்ளவர்கள், இரவு உணவுக்கு பிறகு பூவன் பழங்களை சாப்பிடலாம்.. இதனால் குடல் இயக்கமும் சீராக செயல்பட தூண்டுகிறது.. செரிமானத்திற்கு தேவையான குடல் நுண்ணுயிர்களை பெருக்கக்கூடியது பூவன் பழங்கள்..
அஜீரணக்கோளாறு: அதேபோல, அஜீரணக் கோளாறு இருப்பவர்கள், கோளாறு தினமும் ஏதாவது ஒரு வேளை, வேறு உணவையும் சாப்பிடாமல் வெறும் 2 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு விலகிடும். புகைப்பழக்கத்தை கைவிட வேண்டுமானால், இந்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்.
அதேபோல, மூல நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.. அந்தவகையில், இரவு உணவுக்குப்பிறகு ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் தணியுமாம்.
உடல் குளிர்ச்சி: இவ்வளவு நன்மைகளை பேயன் வாழைப்பழம் தந்தாலும், உடல் குளிர்ச்சி உள்ளவர்கள், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இந்த பூவன்பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications