திமுக 3, தவெக 1.. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் யார்?
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் மொத்தமாகவே 3 முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் தவெக ஆட்சி அமைந்து இன்னும் 2 மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத சூழலில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் எவ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது, முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஆத்தூர் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளித்தனர்.

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அனிதா ராதாகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த மனு தள்ளுபடியான 90 நிமிடங்களில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.
தவெக ஆட்சி அமைத்து இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கின்றனர். இது திமுகவினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டதில்லை.
அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியிலும் கூட மொத்தமாக 3 முன்னாள் அமைச்சர்கள் தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக 2022 ஜனவரி மாதத்தில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கியதாக 2022 பிப்ரவரியில் சென்னை போலீசால் கைது.செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் அபகரித்ததாக புகாரில் 2024 ஜூலையில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டார்.














Click it and Unblock the Notifications