சனி வக்ர பெயர்ச்சி: வச்சு செய்ய போகும் சனி.. கடக ராசிக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

sani-vakra-peyarchi-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-during-during-sani-vakra-pe

சனி வக்ர பெயர்ச்சி

அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசியினருக்கு சனி பகவானின் வக்கிர சனியானது மீண்டும் அஷ்டமத்து சனியை நினைவுபடுத்தும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் உடம்பால், மனதால், வருமானத்தால், உறவினர்களால், குடும்பத்தினரால், சக ஊழியர்களால் பட்ட கஷ்டம் எல்லாம் மீண்டும் வரும் 138 நாட்களுக்கு வரக்கூடிய அமைப்புள்ளாதல் மிகுந்த கவனம் தேவை. இந்த காலத்தில் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்

உங்களை நீங்களே தயார்படுத்திக் கொண்டே எந்த விஷயமானாலும் அதனை எளிதாக சமாளித்துச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். சனி பகவான் பார்வை காரணமாக 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வீட்டுக்குள் உங்கள் மதிப்பு சிறிது குறையும். இதுவரைக்கும் செய்த செயல்களுக்கு பெயர், புகழ் சரியாக இல்லை என்பது தெரியும். கொடுக்கல், வாங்கல்கள் உங்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

நிதானம் அவசியம்

உங்களுக்கு கொடுக்க வேண்டியவர்களால் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாத தன்மை, அதனால் மன அழுத்தம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. 5 ஆம் இடத்தையும் சனி பார்ப்பதால் பிள்ளைகளின் வளர்ச்சி, வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 5 ஆம் இடத்தையும் சனி பார்ப்பதால் பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்..

கவனம்

பிள்ளைகளுக்குப் பிடிக்காத விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. அவர்களை கட்டாயப்படுத்துவது, திணிப்பது, திருத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். செய்கின்ற தொழிலில் சிறு சிறு இடையூறுகள் வந்து சேரும். உங்கள் மேலேயே சிறு சிறு புகார்கள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. அதனை கண்டு கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+