பிரவீனா திருச்சி வயல்வெளியில் தந்த இன்ப அதிர்ச்சி.. "அன்புள்ள பார்வதிக்கு உன்னுடைய கணவன் பாக்யராஜ்
சென்னை: பிரவீனா மிகவும் உயிருக்குயிராகப் பாக்யராஜ் அவர்களை நேசித்தார். அவருடைய இறப்புச் சடங்கிற்கு நான் சென்றிருந்தேன், அப்போது திரைப்பட உலகமே திரண்டு வந்து சோகத்தில் மூழ்கியிருந்தது. பிரவீனா வணிகம், கால்ஷீட் அனைத்தையும் மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார். பிரவீனாவின் இழப்பை அவர் வாழ்நாள் முழுதும் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டார் என்று பிரபல தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"பாக்யராஜின் கலைப் பயணத்தின் தொடக்கத்தில், ஆந்திராவிலிருந்து வந்த பிரவீனாவுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. பிரவீனாவிற்குத் தமிழ் தெரியாது. அதனால் அவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தபோது 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பிரவீனா பாக்யராஜ்
பிரவீனா பாக்யராஜை தீவிரமாகக் காதலித்தார். ஒருமுறை பாக்யராஜ் ஷூட்டிங்குக்காக வெளியில் இருந்தபோது, அவருக்கு ஷாக் சர்ப்ரைஸ் தருவதற்காக பிரவீனா இங்கிருந்து திருச்சி வரை காரிலேயே போனார்.. அங்கே ஒரு வயல்வெளியின் நடுவே பாக்யராஜ் முன்னாடி போய் நின்றார்.. அந்த சம்பவம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. பிரவீனாவுக்காகவே 'பாமா ருக்மணி படத்தை இயக்கி, அதில் ஹீரோயினாகவும் நடிக்க வைத்தார்.
துரதிர்ஷ்டவசமாக பிரவீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. 3 வருடங்கள் கூட நீடிக்காமல் கொஞ்ச நாளிலேயே பிரவீனா வாழ்வு முடிவுக்கு வந்தது.
அன்புள்ள பார்வதிக்கு
பிரவீனாவின் மறைவால் பாக்யராஜ் ரொம்பவே மன வருத்தத்துக்கு உள்ளானார். பிரவீனா உயிருடன் இருந்தவரை பாக்யராஜின் வளர்ச்சியை பிரமித்து பார்த்தார்.. அவரை உயிருக்கு உயிராகவும் நேசித்தார்.
சினிமா உலகிற்கு என்னை இவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்திவிட்டு இந்த அரசி என்னை விட்டுட்டுப் போய்விட்டாளே' என்று மிகவும் வருந்தினார். ஒவ்வொரு வருடமும் பிரவீனாவின் நினைவு நாளன்று, நாளிதழ்களில் கால் பக்க விளம்பரம் கொடுப்பார்.
பிரவீனாவை அவர் 'பார்வதி' என்றுதான் அழைப்பார். அந்த விளம்பரத்தில் அப்படியே அவரிடம் நேரடியாகப் பேசுவது போல 'அன்புள்ள பார்வதிக்கு... இப்படிக்கு உன்னுடைய அன்பு கணவர் பாக்யராஜ்' என்று முடிப்பார். இந்த வருடம் பார்வதிக்கு என்ன எழுதப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.
பிரவீனா மிகவும் உயிருக்குயிராகப் பாக்யராஜ் அவர்களை நேசித்தார். அவருடைய இறப்புச் சடங்கிற்கு நான் சென்றிருந்தேன், அப்போது திரைப்பட உலகமே திரண்டு வந்து சோகத்தில் மூழ்கியிருந்தது. பிரவீணா வணிகம், கால்ஷீட் அனைத்தையும் மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார். பிரவீனாவின் இழப்பை அவர் வாழ்நாள் முழுதும் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
பூர்ணிமாவின் அன்பு
பிரவீனாவின் மறைவிற்கு பிறகு, பாக்ராஜின் வாழ்க்கையில் பூர்ணிமா நுழைந்தார். மும்பையில் வளர்ந்த பூர்ணிமா, மலையாள படங்களின் மூலம் அறிமுகமாகி, பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாகவும் உயர்ந்தார். பிரவீனாவின் இழப்பால் தனிமையில் வாடிய பாக்கியராஜ்ஜுக்கு பூர்ணிமாவுடன் இணைந்து நடிக்கும்போது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. பிறகு 2 பேரும் இருவரும் இணைந்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க முடிவெடுத்தனர்.
பூர்ணிமா மிகவும் அர்ப்பணிப்புள்ள பெண். திருமணத்திற்குப் பிறகு அவர் ஈரோட்டு மக்களின் பழக்கவழக்கங்களோடும், பாக்யராஜின் உறவுகளோடும் மிகவும் நெருக்கமாகி விட்டார்..
சொந்த தம்பியின் திருமணம்
பாக்யராஜின் அண்ணன் மகளுக்கு தன் சொந்தத் தம்பியையே திருமணம் செய்து வைக்கும் அளவிற்குப் பூர்ணிமா அந்தக் குடும்பத்தோடு ஒன்றிப்போனார். பாக்யராஜ்ஜுக்கு உடல்நலக் குறைவு இருந்தபோது, அவருடைய சாப்பாட்டு முறை,உடல் எடைப் பராமரிப்பு எல்லாவற்றையும் பூர்ணிமா பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டார்.
ஒருமுறை பாக்யராஜ் பொருளாதார ரீதியாகச் சிரமப்பட்டபோது, பூர்ணிமா ஒரு தையல் கலை நிறுவனத்தைத் தொடங்கி ஆடைகளை வடிவமைத்து அந்தக் குடும்பத்திற்குப் பேருதவியாக நின்றார்.
பாக்யராஜ்ஜின் வெற்றிக்கு பின்னால் பூர்ணிமாவின் பங்கு மிக முக்கியமானது. அவர் எப்போதும் பாக்யராஜைத் தனியாக எங்கும் அனுப்பாமல் துணையாகவே சென்றார். பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியினர் கலைத்துறையில் ஒரு முன்மாதிரியான தம்பதிகளாகத் திகழ்ந்தனர். பிரவீனாவின் அன்பும், பூர்ணிமாவின் அர்ப்பணிப்பும் பாக்யராஜ்ஜின் வாழ்க்கையை முழுமைப்படுத்தின" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications