இந்து அறநிலையத்துறையில் வேலை.. 8 ம் வகுப்பு தகுதி.. டிரைவிங் லைசன்ஸ் இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது, சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்: திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் மொத்தம் 4 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் டிரைவிங் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி அவசியம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2024- அன்று 18-வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தபால் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான கல்வி தகுதி, அடையாள சான்று உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.9,250 கொடுக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்-637-211
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.10.2024- மாலை 05.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்ய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf
இந்த வெப்சைட்டில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்யலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications