அரசு ஊழியர்களுக்கு வந்த நல்ல செய்தி! நாடு முழுக்க போன சர்க்குலர்! பென்சனில் புது சர்ப்ரைஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் , அவர்கள் பென்சன் தொடர்பாக வைக்கும் கோரிக்கைகள், விண்ணப்பங்களை உடனே விசாரித்து தீர்வு அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு நிதி அமைச்சகத்தின் மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை மத்திய வாரியம் (செலவு ஒருங்கிணைப்புப் பிரிவு) உத்தரவிட்டு உள்ளது. அதாவது அரசு விதிகளில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பென்சன் வழங்க காலக்கெடு: அரசு விதிகளின்படி,
1.மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே, சேவைப் பதிவேடுகளைச் சரிபார்த்தல் மற்றும் இதர ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
2. மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் தேவையான படிவங்களை அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. அலுவலகத்தின் தலைவர் ஓய்வூதிய விவரங்களை ஓய்வூதிய கணக்கியல் அலுவலகங்களுக்கு (PAOs) ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அனுப்ப வேண்டும்.
4. அதன்பின் ஓய்வூதிய கணக்கியல் அலுவலகங்கள் ஓய்வூதிய கொடுப்பனவு ஆணையை (பிபிஓ) வழங்க வேண்டும்.
5. ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகத்திற்கு (சிபிஏஓ) எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும், எப்படி வழங்கப்படும், எந்த தேதியில் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்கள் முறையாக பென்சன் பெறுவதை உறுதி செய்யும் வகையில்.. மேற்கண்ட டைம்லைனை எல்லோரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுக்க உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற பின்வரும் விவரங்களை அளிக்க வேண்டி இருக்கும்.
1. ஓய்வூதியம் பெறுபவரின் பெயர்
2. ஓய்வு பெறும் தேதி
3. ஓய்வூதியதாரர் அலுவலகத் தலைவரிடம் ஆவணங்களைச் அனுப்பிய தேதி (ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு)
4. ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகங்களுக்கு அலுவலகத் தலைவர் ஓய்வூதிய வழக்கை சமர்ப்பித்த தேதி (4 மாதங்களுக்கு முன்பு)
5. ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகம் மூலம் ஓய்வூதியத்தை ஆய்வு செய்து, அதை மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகத்திற்கு அனுப்புதல் (ஓய்வு தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட வேண்டும்)
பென்சன் மாற்றம்: இது போக பென்ஷன் ஆன் ஹையர் வேஜஸ் எனப்படும் அதிக ஊதிய (PoWH) ஓய்வூதிய திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள 97,640 PF (Provident Fund) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கான பென்ஷன் தொகை வழங்கப்பட உள்ளது.
கோரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபர்களின் எண்ணிக்கையுடன் (89,235) ஓய்வூதியம் செலுத்தும் ஆணைகள் (பிபிஓ) வழங்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை (8,401) சேர்த்து மொத்தமாக 97,640 PF (Provident Fund) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 2022 இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் பெற.. அதாவது PoWH திட்டத்திற்கு தகுதியுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கான பென்சன் தொகை வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications