பிஎஸ்சி, பிஏ, பிகாம் படித்தவரா? Accenture தரும் வேலைவாய்ப்பு.. சென்னை, கோவையில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஆக்ச்சென்ச்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர் உள்பட மொத்தம் 11 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்சி, பிஏ, பிகாம், பிபிஏ, பிசிஏ, உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் என்பது தேவையில்லை.
நம் நாட்டில் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின்படி சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் (System And Application Services Associate)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பிரிவின் கீழ் Infra Managed Services, Application/cloud Support, Projec Control Services, Low/No code app development, Quality Engineering உள்ளிட்ட டொமைன்களில் ஏதாவது ஒன்றில் பயிற்சி வழங்கி பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி: சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் பணிக்கு பிஎஸ்சி, பிசிஏ, பிபிஏ, பிஏ, பிகாம் உள்ளிட்ட டிகிரி படிப்பை எந்த ஆண்டில் முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா சயின்ஸ், உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
இந்த படிப்புகளை கல்லூரி சென்று முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். பார்ட் டைம் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் எதுவும் இருக்க கூடாது. ஆக்ச்சென்ச்சர் நிறுவனத்தில் கடைசியாக 3 மாதத்துக்குள் ஏதாவது இண்டர்வியூ அட்டென் செய்திருந்தால் அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,44,200 சம்பளமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் தொடக்கத்திலேயே மாதம் ரூ.28,683 சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம்: பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications