அடடே! ஏர் இந்தியாவில் கொட்டி கடக்கும் வேலைகள்.. எழுத்து தேர்வே இல்லை! 10th பாஸ் செய்தால் கூட போதும்
சென்னை: ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (aiasl) சென்னை பிரிவில் பல்வேறு காலியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சில மாதங்களுக்கு முன்பு வாங்கியது. ஏர் இந்தியாவை டாடா லாபகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதலில் டாடாவிடம் ஏர் இந்தியாவைத் தான் சுதந்திரம் அடைந்த போது, மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. இப்போது பல ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஏர் இந்தியா டாடா வசம் சென்றுள்ளது.

டாடா
நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட ஏர் இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் தான் இயங்கி வந்தது. இதன் காரணமாகவே மத்திய அரசு அதை விற்றது. இப்போது டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை லாபகரமான நிறுவனமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல விரிவாக்க முயற்சிகளிலும் இறங்கி உள்ளது.

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட்
அதே நேரம் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (aiasl) இன்னும் அரசிடமே உள்ளது. இதனிடையே இந்த நிறுவனத்தின் சென்னை பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை. இதில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் நவ. 12 முதல் 15 வரை நடைபெறும் நேர்முக தேர்தலில் கலந்து கொள்ளலாம்.

பணி விவரம்
பணி: வாடிக்கையாளர் சேவை நிர்வாகி
மொத்த காலியிடங்கள்: 144
தகுதி: எதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேதி: நவம்பர் 12 முதல் 14 வரை
பணி: யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ரேம்ப் ஓட்டுநர்
மொத்த காலியிடங்கள்: 15
தகுதி: கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பணி அனுபவம் தேவை. குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சியடைய வேண்டும்.
தேதி: நவம்பர் 14
பணி: ஹேண்டிமேன்
மொத்த காலியிடங்கள்: 150
தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும்
தேதி: நவம்பர் 15

முக்கிய தகவல்கள்
மூன்று பணிகளில் காலியிடங்களை நிரப்ப மேற்கூறப்பட்டு உள்ள தேதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள ஏச்ஆர்டி துறை அலுவலகத்தில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. முழு முகவரி: ஏச்ஆர்டி துறை அலுவலகம், ஏஐ யூனிட்டி வளாகம், பல்லாவரம், கன்டோன்மென்ட், சென்னை - 600 043. கூடுதல் விவரங்களை www.aiasl.in., www.aiahl.in தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications