கோவை , தூத்துக்குடி ,நாகர்கோவில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: கோவை தூத்துக்குடி நாகர்கோவில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (பிப். 5) நடைபெறுகிறது. இதில், எஸ்எஸ்எல்சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை ( 5.2.2021) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பல்வேறு முன்னணிதனியார் நிறுவனத்தினர் பங்கேற்கவுள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ,ஐடிஐ மற்றும் கணினி பயிற்சிகல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 6380089119 என்ற அலுவலக செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (5-ம் தேதி) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினி பயிற்சி பெற்ற கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் சேர்ந்து பயிலலாம். வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம் என, வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications