படுக்கையறையில் போலீஸ் செய்த அந்த ஒரு செயல்.. பம்பாய் உயர் நீதிமன்றம் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கார் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.. இந்த கார் விபத்து தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரிக்க வேண்டியிருந்தது.. இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக போலீசார், அந்த பெண்ணின் படுக்கையறைக்கே சென்றுவிட்டார்களாம்.. இந்த விவகாரம்தான் இப்போது கோர்ட் வரை சென்றுள்ளது.. பாம்பே நீதிமன்றமும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்ன?
மராட்டிய மாநிலம், நாக்பூர் சாவ்னெர் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 26 வயதாகிறது.. இவர்., மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்..

மும்பை ஹைகோர்ட்
அந்த மனுவில், "கார் விபத்து வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக போலீசார் எனது வீட்டுக்கு வந்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் எனது படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்விட்டார்கள்.. என்னையும் எனது கணவரையும் மிரட்டும்தொனியில் விசாரித்ததோடு, எனது செல்போனையும் சட்டவிரோதமாக பறிமுதல் செய்து 2 நாட்கள் வைத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் எனக்கோ, எனது கணவருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. எங்களை குற்றவாளிகளாகவும் சேர்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பெண்ணின் படுக்கையறைக்குள் போலீசார்
இந்த வழக்கை விசாரித்த பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி பால்கே மற்றும் நிவேதிதா மேத்தா ஆகியோரால், போலீஸாரின் இந்த அத்துமீறலை பொறுத்துக் கொள்ளவில்லை. விசாரணை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று போலீஸார் நினைக்கக்கூடாது என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.
ஒருவருடைய வீட்டிற்குள், அதுவும் ஒரு பெண்ணின் படுக்கையறைக்குள் இப்படிச் செல்வது, தனிமனித உரிமையை அப்பட்டமாக மீறும் செயல் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
நீதிபதிகள் காட்டிய காட்டம்
"இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிற தனிப்பட்ட சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் போலீஸார் காக்க வேண்டுமே தவிர, அதை மீறக் கூடாது, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு மகாராஷ்டிர அரசு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை அரசு இரண்டு மாதங்களுக்குள் அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
இடிந்துபோன அதிகாரி
அதுமட்டுமல்ல, அந்தப் பணத்தை அரசின் கஜானாவிலிருந்து கொடுப்பதற்குப் பதிலாக, யார் அந்த அத்துமீறலை செய்தார்களோ, அந்த குறிப்பிட்ட காவல் அதிகாரியிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதுதான் ஹைலைட்..
பணத்தால் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியாது என்றாலும், இது அந்தப்பெண்ணுக்கு ஒரு ஆறுதலாகவும், போலீசார் சட்டப்படிதான் சட்டப்படிதான் நடக்கவேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகவும் இது அமையும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications