Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவருடன் உடலுறவுக்கு மறுப்பதும் சித்ரவதை தான்.. உறவை தவிர்த்த மனைவிக்கு பம்பாய் நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உறவு சிக்கல்கள் தொடர்பான வழக்குகள் சமீபகாலமாகவே நீதிமன்றங்களில் பெருகி வருகின்றன.. குறிப்பாக, திருமண முறிவு, ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், கணவர் தன்னுடன் உறவுக்கு மறுப்பதாக கூறி, திருமணமாகி 2 வருடங்களிலேயே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஒரு இளம்பெண்.. இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை தற்போது வழங்கியிருக்கிறது.. நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

பாலியல் உறவுக்கு மறுப்பதும் குற்றம்.. அதேபோல, பாலியல் உறவை தவிர்ப்பதும் குற்றம் என்பது போன்ற உத்தரவுகளை, நீதிமன்றங்கள் சமீபகால வழக்குகளில் பிறப்பித்திருந்ததை இங்கு ஒருமுறை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் நடந்த 2 வழக்குகளை மட்டும் பார்ப்போம்.

bombay physical relationship judge

முதல் வழக்கு

பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த தம்பதிக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்துள்ளது.. கணவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.. மேலும் தம்பதிகளுக்குள் உறவு சிக்கலும் வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த மனைவி, மெடிக்கல் செக்கப் செய்து கொள்ள மருத்துவமனைக்கு வருமாறு மனைவி அழைத்ததாக தெரிகிறது. இதற்கு கணவன் மறுக்கவும் மனைவி கோபமாகி தகராறு வெடித்துள்ளது.

இதையடுத்து, கணவர் தன்னுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதுடன், இது குறித்து கேட்டாலே, தன்னை துன்புறுத்துகிறார் என்று நீதிமன்றத்தை நாடினார்..

துணையின் தேவை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "திருமண வாழ்க்கையில் பாலியல் உறவு முக்கிய பங்கு வகிக்கிறது.. ஒரு துணை தன்னுடைய துணையின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்புடையவர்.. துணைவியின் இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாதது, இல்லற வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.. எனவே, கணவர் அந்த பெண்ணுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

2வது வழக்கு

அதேபோல, உத்தரப்பிரதேசம் குடும்ப நீதிமன்றத்திலும் ஒரு வழக்கின் தீர்ப்பு கவனம் பெற்றிருந்தது.. மனைவி தன்னுடன் 7 வருடமாக உடலுறவு கொள்ள மறுப்பதாகவும், , பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காத‌தால், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கோரி கணவர் மனு தாக்கல் செய்தார்.

உடலுறவுக்கு துணை மறுப்பு

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருமணம் ஆன பிறகு நீண்ட காலம் உடலுறவுக்கு துணை மறுப்பு தெரிவித்திருப்பது மிகப்பெரிய மன கொடுமை என தெரிவித்து, கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேற்கண்ட இந்த 2 வழக்குகளின் தீர்ப்புகளுமே, பொதுமக்களின் கவனத்தை பெற்றிருந்தது..

இதோ அடுத்த வழக்கு

இந்நிலையில் இதுபோலவே ஒரு வழக்கில் மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது... அது என்ன தெரியுமா?

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2013-ல் திருமணம் நடந்தது. ஆனால், மறுவருடமே தம்பதி இருவரும் தனித்தனியாக தனியாக பிரிந்து வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்..

2015ல் பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு புனே குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், மனைவி தன்னை பல வகைகளில் சித்ரவதை செய்வதாகவும் புலம்பி தள்ளியிருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த குடும்ப நலக்கோர்ட்டு கணவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவைஎதிர்த்து, அந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்.. தன்னுடைய மனுவில் அப்பெண் கூறியிருப்பதாவது:

நீதிபதிகள் பரபர உத்தரவு

"கணவரின் பெற்றோர் தான் தன்னை கொடுமைப்படுத்துகிறார்களே தவிர, என்னுடைய கணவர் ரொம்ப நல்லவர்.. நான் என்னுடைய கணவரை உயிருக்குயிராக நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.. எனவே, குடும்ப நலக்கோர்ட்டு வழங்கிய விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும்.. நாங்கள் ஒன்றுசேர்ந்து வாழும் காலம் கனியும் வரை கணவர் பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.1 லட்சம் தர உத்தரவிட வேண்டும்" என்று அந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம், நீதிபதிகள் ரேவதி மோகிதே, நீலா கோகலே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஹைகோர்ட்டில் பதிலளித்த கணவர், "என்னுடைய மனைவி என்னுடன் உறவு கொள்ள மறுக்கிறார், நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் சந்தேகப்படுகிறார். குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் முன்னிலையிலேயே என்னை அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார்.

இன்னும் பல வகைகளில் என்னை சித்ரவதை செய்கிறார். அவர்தான் என்னை கைவிட்டு விட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அதனால் குடும்ப நலக்கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

மனைவி வைத்த வாதம்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "கணவருடன் உறவுக்கு மறுப்பது, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவது, இவைகளையெல்லாம் சித்ரவதையாக தான் கருத முடியும். மனுதாரரான பெண் கணவரின் சக ஊழியர்கள் முன்னிலையில் நடந்து கொண்ட விதம், அவருக்கு நிச்சயம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கும்.

அவரது நண்பர்கள் முன்னிலையில் ஆணுக்கு அவமானம் விளைவிப்பதும் அவருக்கு இழைக்கும் கொடுமை. கணவரின் மாற்றுத்திறனாளி சகோதரியிடம் அக்கறையின்மை மற்றும் அலட்சிய நடத்தை அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தும். எனவே இந்த தம்பதியரின் திருமண உறவை குடும்ப நலக்கோர்ட்டு ரத்து செய்வதை உறுதி செய்கிறோம்" என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.

புனே குடும்ப நல கோர்ட்டின் விவாகரத்து உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன், அப்பெண்ணின் மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+