மண்ணுக்கடியில் சிக்கிய 35 உயிர்கள்! வயநாடு நிலச்சரிவில் மீட்புப்பணிகள் தீவிரம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கள்ளாடி பகுதியில் பெய்து வரும் அதீத கனமழை காரணமாக இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அனக்கம்பொயில்-கல்லாடி-மேப்பாடி இரட்டை சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 35 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், கேரள தீயணைப்பு துறையினர், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் மீட்டு வருகின்றனர். இருப்பினும் 35 பேரின் உயிரை காப்பாற்றும் பணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.

கல்லாடி மீனாட்சி பாலம் அருகே நடைபெற்று வரும் சுரங்கப்பாதை கட்டுமான தளத்தில் இன்று மதியம் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் 200 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவின் போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 முதல் 35 தொழிலாளர்கள் வரை மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள்
இதுவரை இடிபாடுகளுக்குள் இருந்து 6 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் சேறு சகதியால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கேரள முதல்வர் வி.டி. சதீசன் நிலைமையை நேரில் ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் டி. சித்திக் மற்றும் ஏ.பி. அனில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications