ஆந்திராவில் அதானி பவுண்டேஷனின் புதிய திட்டம்... குப்பத்தில் தொடங்கிய "பங்காரு குடும்பங்கள்" திட்டம்

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், மாநில அரசின் அரசு தனியார் பங்களிப்பு (Public-Private-People Partnership) திட்டத்தின் கீழ் ஆதானி அறக்கட்டளை இணைந்து செயல்படுகிறது. இந்த புதிய பார்ட்னர்ஷிப் கீழ் அமைந்துள்ள திட்டத்தை முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தனது தொகுதியான சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தொடங்கி வைத்தார்.

அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் அதானி அறக்கட்டளை நாடு முழுக்க பல்வேறு பகுதிகளிலும் பல நலத்திட்டங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் உள்ள மக்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

Adani Foundation adani

அதானி

அதன்படி அதானி குழுமம்- ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடு அரசுடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. குப்பம் பகுதியில் உள்ள 'பங்காரு குடும்பங்கள்' என அடையாளப்படுத்தப்படும் ஏழை குடும்பங்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். குடும்ப வருமானத்தை அதிகரிப்பதுடன், நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்களை எளிதில் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் இதில் வழங்கப்படும்.

"Transforming Lives Together: A P4 Model for Holistic Progress of Bangaru Kutumbams in Kuppam Mandal" என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், குப்பம் மண்டலத்தில் உள்ள 29 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த திட்டம் ஆந்திரப் பிரதேச மகிளா அபிவிருத்தி சொசைட்டி உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

உதவி

இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பொதுமக்களுக்குத் தையல் இயந்திரங்கள், கையில் எடுத்துச் செல்லக்கூடிய வெல்டிங் கருவிகள், எம்பிராய்டரி இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்களை சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்த விழாவில் பேசிய அவர், "பங்காரு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த முயற்சியில் ஆதானி அறக்கட்டளை இணைந்திருப்பது பாராட்டத்தக்கது. மாநில அரசின் ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் நோக்கத்தை இந்த கூட்டணி பிரதிபலிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சமூகப் பொறுப்பை இது வெளிப்படுத்துகிறது" என்றார்.

இது தொடர்பாக ஆதானி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ப்ரீத்தி ஆதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலையான நீடித்த முன்னேற்றம் என்பது குடும்பங்களிலிருந்தே தொடங்குகிறது. சரியான வாய்ப்புகளும், தேவையான ஆதரவும் கிடைத்தால் குடும்பங்கள் தன்னிறைவு பெற்று, எதிர்கால தலைமுறைக்கும் நல்ல அடித்தளத்தை உருவாக்க முடியும். ஆந்திர அரசுடன் இணைந்து செயல்படுவது அந்த இலக்கை எளிதாக அடைய உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

நலத்திட்டங்கள்

இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளின் திறன் மற்றும் உள்ளூர் தேவைக்கு ஏற்ப மளிகைக் கடை, கால்நடை வளர்ப்பு, தையல் மையம் உள்ளிட்ட சிறு தொழில்களை தொடங்க தேவையான உதவிகள் வழங்கப்படும். மேலும், 'பங்காரு மித்ரா' என்று அழைக்கப்படும் வழிகாட்டிகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தொழில் திட்டம் தயாரித்தல், நிதி மேலாண்மை, தொழில் மேம்பாடு மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான உதவிகளை வழங்குவார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, நிலையான வாழ்வாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சுமார் 150 கிராமங்களில் ஆதானி அறக்கட்டளை பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 7,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1.3 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அதானி அறக்கட்டளை உதவிகளைச் செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+