பாக்யராஜ் மறைவுக்கு பிறகு மருமகள் உருக்கமான பதிவு.. சந்தோஷமான செய்தி இருக்கா? பிரபலம் இப்படி சொல்கிறாரே?
சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்து சில வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால் அந்த இழப்பின் வலி அவரது குடும்பத்தினருக்கு இன்னும் குறையவில்லை என்பது தற்போது அவருடைய மருமகளும் பிரபல தொகுப்பாளியுமான கீர்த்தி (கிகி) பகிர்ந்த ஒரு இன்ஸ்டா பதிவிலேயே தெரிகிறது. தன்னுடைய மாமனார் குறித்து அவர் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார். அதே நேரத்தில் கீர்த்தி பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசிய பேட்டியும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு பக்கம் சினிமா ரசிகர்கள் பாக்யராஜின் படங்களையும் அவருடைய பழைய பேட்டிகளையும் பார்த்து அவரைப் பற்றி நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் பிரபலங்களும் பாக்யராஜ் பற்றிய தகவல்களை சொல்லி வருகின்றனர். ஆனால் அவருடைய குடும்பம் மட்டும் இன்னும் பாக்யராஜ் நினைவுகளுடன் தான் வாழ்ந்து வருகிறது. அதாவது கிகி இன்றைக்கு பகிர்ந்துள்ள இரண்டு புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பாக்யராஜ் மருமகள் பதிவு
முதல் போட்டோவில் பாக்யராஜ் அவருடைய மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மருமகள் கிகி ஆகியோருடன் ஒன்றாக சந்தோஷமாக சிரித்தபடி இருக்கும் குடும்ப பகை புகைப்படம் இருக்கிறது. அடுத்த போட்டோ தான் அனைவரையும் கண்கலங்க வைக்கும் காட்சி அதாவது கிகி தன்னுடைய மாமனார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கும்பிடுவது போல இருக்கிறது. அந்த இரண்டு புகைப்படங்களுக்கும் "மிஸ் யூ அப்பா" என்ற சில வார்த்தைகளோடு அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் டேக் செய்திருக்கிறார்.
பாக்யராஜ் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் அவரின் சோசியல் மீடியா அக்கவுண்டை டேக் செய்து பகிரப்பட்ட அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதே நேரத்தில் பாக்யராஜ் மறைவிற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் பிரபல youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது கிகி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அந்த விஷயம் பாக்யராஜிற்கு தெரியாமலே அவர் மறைந்து விட்டார் என்றும் சொல்லி இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி
சாந்தனுக்கு பிறக்கும் குழந்தையாகவே பாக்யராஜ் மீண்டும் பிறப்பார் என்று அவர் சொல்லி இந்த தகவல் உண்மையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் பேட்டிகளில் பல நடிகர்கள், நடிகைகளின் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசியே பிரபலமானவர். இதனால் அதேபோல இவர் வியூசுக்காக இப்படி பேசுகிறாரா? அல்லது உண்மையிலேயே கிகி கர்பமாக இருக்கிறாரா? என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பாக்யராஜ் கடைசியாக கொடுத்த சர்ப்ரைஸ்.. என் வாழ்க்கையில் மறக்க முடியாது! பூர்ணிமா உருக்கம்
கிகி மற்றும் சாந்தனுவுக்கு கல்யாணம் ஆகி 11 வருடங்கள் கடந்துவிட்டது. அவர் சோசியல் மீடியாவில் எந்த வீடியோக்கள் வெளியிட்டாலும் கூட அவரிடம் பலரும் எப்போது கர்ப்பமாக போறீங்க? எப்ப குழந்தை பெற்றுக்கொள்ள போகிறீங்க? என்று கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் தான் ஒரு வீடியோவில் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவருமே கடுப்பாகி தங்களைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருந்தனர்.
சாந்தனு கிகி பதிலடி
நாங்கள் குழந்தை பெற்றால் நீங்களா வந்து அந்த குழந்தையை வளர்க்க போறீங்க? கடவுள் எங்களுக்கு எப்போ கொடுக்கணும்னு இருக்கிறதோ அப்போ எல்லாமே நடக்கும். நீங்க இப்படி கேட்டு எங்களை கஷ்டப்படுத்தாதீங்க என்று விளக்கம் கொடுத்திருந்தனர். அதேபோல இப்போதும் நிஜத்தில் கீர்த்தி கர்ப்பமாக இருக்கிறாரா? அல்லது இது வதந்தி செய்தி தானா? என்ற கேள்விகளும் பலருக்கு இருக்கிறது.
எது எப்படியோ பாக்யராஜ் குடும்பத்தினருக்கு சீக்கிரமாக மகிழ்ச்சி செய்தி வந்து அவருடைய குடும்பத்தினர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.













Click it and Unblock the Notifications