அடடே.. ரவி மோகனின் மாமியார் தான் அந்த வில்லியா? நடிகை கஸ்தூரி உடைத்த ரகசியம்! ரசிகர்களுக்கு செம ஷாக்
சென்னை: நடிகை கஸ்தூரி பாக்யராஜ் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது நடிகர் ரவி மோகனின் மாமியார் பற்றி சொன்ன விஷயம்தான் சோசியல் மீடியாவில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்த பிறகு அவருடைய படங்களை பலரும் தேடித்தேடி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கஸ்தூரி பாக்யராஜின் படத்தைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களை சொல்லி இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருந்த கஸ்தூரி, பாக்யராஜை பற்றியும் அவருடைய இறப்பின் போது தான் சிரித்ததாக வெளியான வீடியோ பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், சமீபத்தில் பாக்யராஜ் நடித்த "விடியும் வரை காத்திரு" படத்தை பார்த்ததாகவும் அந்த படத்தில் பாக்யராஜை ஏமாற்றும் காதலி கேரக்டரில் நடித்திருப்பவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்று சொல்லி இருக்கிறார்.
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்
சுஜாதா விஜயகுமார் வேறு யாரும் இல்லை அவர் நடிகர் ரவி மோகனின் மாமியார் தான். பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களில் அவரும் முக்கியமானவர். அவருடைய நிறுவனத்தின் மூலம் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் பாக்யராஜ் நடித்த விடியும் வரை காத்திரு.
ரவி மோகன் மாமியார்
ஆனால் அந்த படத்தில் அவரை பார்த்தவர்களுக்கு இது சுஜாதா விஜயகுமார் என்று அப்போது தெரிந்திருக்காது. ஆனால் இப்போது கஸ்தூரி பேசிய பிறகுதான் அது சுஜாதா விஜயகுமார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி, ரவி மோகன் இருவருக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஆர்த்தி தொடர்ந்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு ஆக்டிவாக இருக்கிறார். அவருடைய போட்டோ சூட் போஸ்டுக்கு எல்லாம் ரசிகர்கள் இவர் பேசாம நடிக்க வந்திருக்கலாம் இரண்டு குழந்தைகள் இருந்தும் ஹீரோயினி மாதிரி இருக்காங்களே என்று கமெண்ட்கள் குவித்து வருகின்றனர். ஆனால் அவருடைய அம்மா நடித்திருப்பது பலருக்கும் தெரியாத கதை அதை கஸ்தூரி உடைத்திருக்கிறார்.
நடிகை கஸ்தூரி பேட்டி
அதுபோல அந்த பேட்டியில் கஸ்தூரி பேசும்போது தான் பாக்யராஜ் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள சென்றபோது சிரித்துக் கொண்டே போனேன் என்று வீடியோக்கள் வைரலானது ஆனால் நான் பாக்யராஜ் வீட்டில் சிரிக்கவில்லை, என்னுடைய காரை விட்டுவிட்டு வெளியே இறங்கி வரும்போது ஒரு செய்தியாளர் என்னிடம் என்னுடைய படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
நான் அவருடன் பேசிக்கொண்டே வந்தேன்... ஒருவர் நம்மிடம் பேசும் போது அழுதபடியா பேச முடியும்? எவ்வளவுதான் மனசுக்குள் கஷ்டம் இருந்தாலும் அவரிடம் சிரித்த முகமாக பேசுவது தானே நம்முடைய மரபு? அதைத்தான் நான் செய்தேன். அப்போ கூட ஒருவர் வீடியோ எடுத்ததும் நான் சிரிச்சுட்டு வரேன் இதை வீடியோவாக போட போறாங்க என்று சொன்னேன். ஆனால் அதை மட்டும் கட் பண்ணி விட்டு நான் சிரித்ததை வீடியோவாக பரப்பி என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றும் ஓபனாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
