டிகிரி போதும்.. எழுத்து தேர்வு இன்றி ரூ.80,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. அழைக்கும் அண்ணா பல்கலை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரோகிராம் லீட் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இல்லாத நிலையில் நேர்க்காணல் முறையில் தான் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செ்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 85 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பபட உள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதாவது அண்ணா பல்கலைகழகத்தின் இன்ஸ்ட்டியூட் ஆப் எனர்ஜி ஸ்ட்டடீஸ்(Institute of Energy Studies) இணைந்து முதல் அமைச்சர் கிரீன் பெல்லோஷிப் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இதற்கு தேவையான ப்ரோகிராம் லீட், ரீசர்ஜ் அசோசியேட், கிரீன் பெல்லோஸ்(Green Fellows) என மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ப்ரோகிராம் லீட் பணிக்கு ஒருவர், ரீசர்ஜ் அசோசியேட் பணிக்கு 4 பேர், கிரீன் பெல்லோஸ் பணிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி, எம்பிஏ மற்றும் பிற பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மாதசம்பளம் என்ன?
மேலும் ப்ரோகிராம் லீட் பணிக்கு மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ரீசர்ஜ் அசோசியேட் பணிக்கு மாதம் ரூ.35 ஆயிரம், கிரீன் பெல்லோஸ் பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் மற்றும் டிராவல் அலோவன்ஸ் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது மே மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்

விண்ணப்ப கட்டணம் இல்லை
இந்த பணிகளுக்கான விண்ணப்பம் செய்ய விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு இல்லை
இதன்மூலம் எழுத்து தேர்வு கிடையாது என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இந்த பணிகள் அனைத்தும் 2 ஆண்டுகளுக்கானது மட்டுமே .தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் annauniv.edu இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். மேலும் சந்தேகங்கள் இருப்பினும் பணி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 044 - 2235 7597 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications