எதிர்பார்க்கவே இல்லையே.. திடீரென பலரின் கணக்கிற்கு.. அரசு அனுப்பிய ரூ.3000.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பணியாளர்களுக்கு, அதாவது முதல்முறை வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ரூ. 3000 EPFO கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கடந்த ஏப்ரல் மாதம் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000 EPFO கணக்கில் பணம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக் இந்த தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதமும் இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான தொகை வங்கி நேரடியாக அவர்களின் EPFO கணக்கில் மே மாதம் செலுத்தப்பட்டு உள்ளது. EPFO இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 12 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் பிஎப் கணக்கில் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.

யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது?

ஒவ்வொரு வருடமும்.. ஒவ்வொரு மாதமும் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படும். இதில் தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ₹3000 அரசு செலுத்தும்.

இபிஎஃப்ஓவில் பதிவு செய்து முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை மூன்று தவணைகளில் மத்திய அரசே அவர்களின் இபிஎஃப்ஓ கணக்கில் செலுத்தும். ₹15,000 வரை அதிகபட்சம் மத்திய அரசு செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

April month payment done EPFO sends Rs 3000 as the PF for the first month PF for freshers

அதன்படி, பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓவில் இணைந்த 15 லட்சம் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000ல் இருந்து வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செல்லாமல் பிஎப் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

EPFOவில் மாற்றங்கள்

இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்.

PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO ​​3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO ​​சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும்.அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்புகளில் தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்த்திக்கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம். அதாவது பிஎப் தொகைக்கு நீங்கள் கூடுதலாக பணம் கட்டலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+