ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்கள்! படிப்பு, பயிற்சியோடு வேலை! டிகிரி முடிச்சவங்க விட்றாதீங்க
சென்னை: ஐடிஐபி வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? பயிற்சியுடன் கூடிய வேலை எப்படி அளிக்கப்படும் என்பது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஐடிபிஐ. மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம்+ சலுகை உள்ளிட்டவை கிடைக்கிறது.

ஐடிஐபியில் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: ஜூனியர் உதவி மேலாளர் (கிரேடு 'ஓ') - 650 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும். கணினி பற்றிய அறிவு அவசியம். உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வங்கியில் நேரடியாக அதிகாரி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் வங்கி மற்றும் நிதிச்சேவை குறித்த முதுகலைப் பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance)படிக்க வேண்டும்.
இந்த படிப்பை வங்கியே வழங்கும். 6 மாதங்கள் வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படும். 2 மாதங்கள் கேம்பசிலும் 4 மாதங்கள் ஆன் ஜாப் டிரெயினிங்கும் கொடுக்கப்படும். இதில் வெற்றிகரமாக தேர்வு செய்யப்படுவர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 01.03.2000 க்கு முன்பாகவோ 01.03.2005 பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. எனினும் அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 30 வயது வரையும் ஒபிசி பிரிவினர் என்றால் 28 வயது வரையும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 35 வயது வரையும் எஸ்.சி/எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் என்றால் 40 வயது வரையும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதியம் எவ்வளவு?: முதல் ஆறு மாதங்களுக்கு பயிற்சி ஊதியமாக ரூ.5 அயிரம் வழங்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதாவது இண்டென்ஷிப் காலத்தில் மாதம் ரூ.15 ஆயிரமும், வங்கி பணியில் சேர்ந்த பிறகு வருடத்திற்கு 6.14 லட்சத்தில் இருந்து ரூ.6.50 லட்சம் வரை கிடைக்கும்.
பிற விவரங்கள்: சம்பளம் பற்றிய விவரங்கள், பணி நிரந்தரம் உள்ளிட்டவைக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. தேர்வர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகே பணியிடத்திற்கு விண்னப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யபடுவார்கள். தமிழகத்தில் சென்னை கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் ஆன்லைன் டெஸ்ட் நடைபெறும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும். தேர்வுக்கட்டணமாக ரூ.1050 கிடைக்கும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 01.03.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.03.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click here
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications