எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 93 ஆயிரம் சம்பளம்.. 12 ஆம் வகுப்பு தகுதி போதும்.. செம சான்ஸ்
சென்னை: எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,526 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?, கல்வித்தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,526 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டெனோகிராபர்/ Combatant ஸ்டெனோகிராபர், தலைமை காவலர் ஆகிய பணியிடங்களுக்குதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு முறை, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: சி.ஆர்.பி.எப், பி.எஸ்.பி.எப், இந்தோ திபெத் காவல் படை பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. அதேபோல உதவி சப் இன்ஸ்பெக்டர் (Stenographer) மற்றும் வாரண்ட் ஆபிசர் பணிகளில் 243 பணியிடங்களும் , தலைமை காவலர் மற்றும் ஹவில்தார் (கிளர்க்) பணியிடங்களில் 1,283 பணியிடங்களும் என மொத்தம் 1,526 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை ஆகஸ்ட்1- 2024 தேதிப்படி 18 - 25 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு முறை: கணினி வழி எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிபிடி எனப்படும் கணினி வழித்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும்.
கணினி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
சம்பளம் எவ்வளவு?: உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு: ரூ.29,200- 92,300 வரை சம்பளமாக கிடைக்கும் ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.25,500- 81,100 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 08.07.2024 கடைசி தேதி ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் ஒரு முறை படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை தெரிவிக்க https://rectt.bsf.gov.in/#bsf-current-openings - இங்கே கிளிக் செய்யவும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications