ரூ.7.50 லட்சம் சம்பளம்.. சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு அழைக்கும் Capgemini.. அக்டோபர் 6 கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில் (Capgemini) இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அக்டோபர் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் கேப்ஜெமினி(Capgemini) சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது நம் நாட்டில் இயங்கி வரும் கேப்ஜெமினி நிறுவனத்துக்கு சாப்ட்வேர் பணிக்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:
கல்வி தகுதி: கேப்ஜெமினி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்சிஏ, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம்செய்யலாம். இந்த பணிக்கு 2024-25ம் ஆண்டில் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
பிற தகுதிகள்: விண்ணப்பம் செய்வோருக்கு கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். ப்ரோகிராமிங் ஸ்கில்ஸ், ஸ்ட்ராங் ஆர்க்கிடிடெக்ச்சர் மற்றும் டிசைன் பேக்கிரவுண்ட் இருக்க வேண்டும். மேலும் எந்த நகரில் பணியமர்த்தப்பட்டாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனலிஸ்ட் பிரிவில் பணியாற்றுவோருக்கு ரூ.4 லட்சம் சம்பளம் + ஒரு முறை வழங்கப்படும் இன்செட்டிவ் என ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் அனலிஸ்ட் (Differtential Hiring) பணிக்கு 5.75 லட்சம் (ரூ.5.50லட்சம் சம்பளம் + ஒரு முறை வழங்கப்படும் இன்செட்டிவ் ரூ.25 ஆயிரம்), சீனியர் அனலிஸ்ட் பணிக்கு ரூ.7.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு அக்டோபர் 6ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு DigiLocker அக்கவுண்ட் இருக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications