சென்ட்ரல் வங்கி 4,500 பேருக்கு வேலை.. உள்ளூரிலேயே வேலை பார்க்க அருமையான சான்ஸ்.. தேதி முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்ட்ரல் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 4,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளவும். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 202 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி பணியிடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நாடு முழுவதும் கிளைகளுடன் இயங்கி வரும் பிரபல சென்ட்ரல் வங்கியில் 4,500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்திலும் சென்னை, மதுரை, திருச்சி என பல்வேறு நகரங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. சென்ட்ரல் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்கள் குறித்த அறிவிப்பு பற்றி மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.

central-bank-of-india-recruitment-4-500-post-how-to-apply-last-date-reminder

பணியிடங்கள் விவரம்:

4,500 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 202 பணியிடங்கள் உள்ளன.

மாவட்ட வாரியாக பார்த்தால் செங்கல்பட்டு - 7, சென்னை - 25, காஞ்சிபுரம் - 6, ராணிப்பேட்டை - 4, திருவள்ளூர் -7, வேலூர் - 8, கோவை - 15, தருமபுரி - 4, திண்டுக்கல்-5, ஈரோடு-3, கரூர்-2, கிருஷ்ணகிரி-5, நாமக்கல் - 2, நீலகிரி - 5, சேலம் - 3, கன்னியாபுரம் - 8, திருப்பூர் - 8 சிவகங்கை - 6, தென்காசி - 4, தேனி - 4, திருநெல்வாலி - 6, தூத்துக்குடி - 9, விருதுநகர் - 3, அரியலூர் - 1, கடலூர் - 11, கள்ளக்குறிச்சி - 2, மயிலாடுதுறை - 1, நாகப்பட்டினம் - 1, பெரம்பலூர் - 1, புதுக்கோட்டை - 1, திருச்சி - 6, திருவண்ணாமலை-4, விழுப்புரம் - 10

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

மாதம் 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ஓராண்டு ஒப்புதல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எக்ஸாம், சான்றிதழ் சரிபார்ப்பு, மொழித்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்து இருப்பது அவசியம்.


விண்ணப்ப கட்டணம்:

ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.600-,ம், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 29.06.2025 ஆகும். தேர்வு ஜூலை முதல்வாரத்தில் நடைபெறும். விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்கள் மட்டும்தான் அவகாசம் இருப்பதால் உடனடியாக விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி பணியிடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.centralbankofindia.co.in/en/recruitments

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+