மத்திய அரசு வேலை.. ஊட்டியிலேயே பணியிடங்கள்.. 10 டூ டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்.. ரெடியா?
சென்னை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தேசிய வானியற்பியல் மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
என்.சி.ஆர்.ஏ எனப்படும் ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையம் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ளன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் இந்த மையம் அமைந்துள்ளது. இந்த தேசிய வானியற்பியல் மையத்தில் தான் தற்போது காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
தொழில்நுட்ப உதவியாளர் - (எலக்ட்ரானிக்ஸ்) - 01
அறிவியல் உதவியாளர் - பி (எலக்ட்ரானிக்ஸ்/கணினிகள்) - 01 பதவி
ஆய்வக உதவியாளர் - பி [எலக்ட்ரானிக்ஸ்] - 01 பதவி
டிரேட்ஸ்மேன் - பி (எலக்ட்ரிக்கல்) - 01 பதவி
டிரேட்ஸ்மேன் - பி (எலக்ட்ரானிக்ஸ்) - 01 பதவி
டிரைவர் (பி) - 01 பதவி
எழுத்தர் (A) - 01 பதவி
செக்யூரிட்டி - 02
பணி உதவியாளர் - 03
என மொத்தம் 12 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பதவிக்கு பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் படித்து இருப்பது அவசியம். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் முடித்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
திறன் பணியாளர் (டிரேட்ஸ்மேன்) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அப்ரெண்டீஸ் பயிற்சி அல்லது பணி அனுபவம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு டிரைவிங் லைசன்ஸ் உடன் 3 ஆண்டுகள் அனுபவமும் கணினி இயக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு?: பாதுகாவலர், பணி உதவியாளர் பணிக்கு ரூ.29,970 சம்பளமாக வழங்கப்படும். கிளர்க், டிரேட்ஸ்மேன், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடத்திற்கு பணியிடத்திற்கு ரூ.37,203 சம்பளமாக வழங்கப்படும். டிரைவர் பணிக்கு ரூ.32,99ம் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு ரூ. 58,986- சப்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2024-5
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications