மத்திய அரசின் ரப்பர் வாரியத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய ரப்பர் வாரிய கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 40 கள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் சுமார் 35 ஆயிரம் சம்பளத்துடன் கூடிய இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மத்திய ரப்பர் வாரிய கழகம் கேரள மாநிலம் கோட்டயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த வாரியம் ரப்பர் உற்பத்தி உள்ளிட்டவைகளில் ஈடுபடுகிறது. மத்திய அரசின் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கள அதிகாரிகள் 40 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பணியமர்த்தப்படும் இடங்கள்- கேரள (திருவனந்தபுரம், கோட்டயம், திருச்சூர் கண்ணூர்), கர்நாடகா (மங்களூர்), அசாம் (கவுகாத்தி), திரிபுரா (அகர்தலா) ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து வேளாண்மை பாடப்பிரிவில் பி.எஸ்.சி அல்லது முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2025 தேதிப்படி 30 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி தேர்வர்களுக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.34,800 வரை சம்பளமாக அளிக்கப்படும். தேர்வு முறையை பார்த்தோம் என்றால் எழுத்து தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வரும் 10.03.2025 @ 11.59 PM- கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitments.rubberboard.org.in/Advertisement%20Field%20Officer%202025.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications