மத்திய உளவுத்துறையில் வேலை.. பிஎஸ்சி முடிச்சவங்களுக்கு அடித்தது யோகம்.. செம சான்ஸ் விட்றாதீங்க!
சென்னை: மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 394 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.81 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு பணிகளில் மிக முக்கிய அங்கமாக உளவுத்துறையும் திகழ்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை அமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. உளவுத்துறை என்பது ஒரு ரகசிய படைபிரிவாக உள்ளது. பயங்கரவாத தடுப்பு பணிகள், தகவல்களை முன்கூட்டியே கண்டறிந்து தெரியப்படுத்துவது என அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் உளவுத்துறை ஈடுபடுகிறது.

பணியிடங்கள் விவரம்:
எனவே உளவுத்துறை பணியில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் தான், மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி கிரேடு-II/டெக் அதாவது, JIO-II/டெக் பிரிவில் 394 காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு பிஎஸ்சி, பிசிஏ ஆகிய பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் என் ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ளவும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊதிய கமிஷன் லெவல் 4 படி, ரூ. 25,500 முதல் ரூ.81 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழகத்தில், சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.650 செலுத்தவேண்டும். எஸ்சி/எஸ்டி, பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.550 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 14.09.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/1/6501256293.pdf












Click it and Unblock the Notifications