Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் 1.45 லட்சம் சம்பளம்.. சென்னை மெட்ரோவில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்! பிஇ முடித்தவர்கள் விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ மற்றும் பி.டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1.45 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மத்திய அரசு மற்றும் தமிழக அரசு கூட்டாக சேர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

Chennai Metro Recruitment 2026 Earn Up to Rs 1 45 Lakh Per Month - BE BTech Graduates Can Apply

பணியிடங்கள் விவரம்:

இணை பொது மேலாளர் (சிக்னல்) - 01 பதவி,
துணை பொது மேலாளர் (செயல்பாடுகள்) - 01 பதவி,
துணை பொது மேலாளர் (டெலிகாம்) - 01 பதவி,
துணை பொது மேலாளர் (மின் அமைப்பு மற்றும் மேல்நிலை உபகரணங்கள்) - 01 பதவி,

துணை பொது மேலாளர் (மின் மற்றும் இயந்திரவியல்) - 01 பதவி.
மேலாளர் (மின் அமைப்பு மற்றும் மேல்நிலை உபகரணங்கள்) - 01 பதவி,
மேலாளர் (மின் மற்றும் இயந்திரவியல்) - 01 பதவி,
மேலாளர் (சிக்னல்) - 01 பதவி என மொத்தம் 8 வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் அல்லது AICTE/UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்குப் பொருத்தமான துறையில் முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பதவிகளுக்கு அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் அனுபவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

வயது வரம்பு

வயது வரம்பைப் பொறுத்தவரை, இணை பொது மேலாளர் (சிக்னல்) பதவிக்கு அதிகபட்சம் 43 வயதும், துணை பொது மேலாளர் பதவிகளுக்கு அதிகபட்சம் 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 38 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

இணை பொது மேலாளர் (சிக்னல்) பதவிக்கு மாதம் ரூ.1,45,000/- சம்பளம் வழங்கப்படும்.
துணை பொது மேலாளர் பதவிகளுக்கு மாதம் ரூ.1,25,000/- சம்பளம் வழங்கப்படும்.
மேலாளர் ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.85,000/- சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணத்தைப் பொறுத்தவரை, SC/ST பிரிவினர் ரூ.50/- செலுத்த வேண்டும். பிற பிரிவினர் ரூ.300/- செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் CMRL-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaimetrorail.org/ சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு பிப்ரவரி 11, 2026 அன்று தொடங்கி மார்ச் 9, 2026 அன்று முடிவடையும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://chennaimetrorail.org/wp-content/uploads/2026/02/CMRL-Detailed-Employment-Notification-No.-CMRL-HR-CON-02-2026-dated-11-02-2026-for-JGM-Signal-others-posts-on-dep-con-basis-Late-date-for-submission-is-09-03-2026.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+