காத்திருந்தது போதும்.. வந்தாச்சு அங்கன்வாடி வேலைவாய்ப்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 154 அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்-03 மற்றும் அங்கன்வாடி உதவியாளர் 78 பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

மாவட்டத்தில் வட்டாரம் / திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில், தகவல் பலகையில் ஒட்டப்படும்.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு 23.04.2025 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொகுப்பூதிய விவரம்:
தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.
ஊதிய விவரம்:
(தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு) அங்கன்வாடி பணியாளர் 7700/-, குறு அங்கன்வாடி பணியாளர் 5700/-, அங்கன்வாடி உதவியாளர் 4100/-. பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு அங்கன்வாடி பணியாளர் 7700- 24200, குறு அங்கன்வாடி பணியாளர் 5700- 18000, அங்கன்வாடி உதவியாளர் 4100, 12500
தகுதிகள்:
காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி பணியாளர் /குறு அங்கன்வாடி பணியாளர் -12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அங்கன்வாடி உதவியாளர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது நிர்ணயம்:
அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின் படி 01.04.2025 கணக்கிடப்பட வேண்டும்.
25 முதல் 35 வயது வரை:
விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்சி / எஸ்டி வகுப்பினர் வயது 25 முதல் 40 வரை (35+5=40) வரம்பு சலுகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை (35+3=38) வயது வரம்பு சலுகை.
25 முதல் 40 வயது வரை: விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்சி / எஸ்டி வகுப்பினர் வயது 20 வயது 5 45 வரை (40+5=45). வயது வரம்பு சலுகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வயது வரை (40+3=43) வயது வரம்பு சலுகை
காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர். அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் (Block /Project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட் டை ஆகிய சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட (Self Attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்ற பெண் (தாய் /தந்தை இறப்பு சான்று ) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications