நோ எக்ஸாம்.. நேர்க்காணல் மட்டுமே.. திண்டுக்கல் அரசு பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து தேர்வு ஏதுமின்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மே 22ல் நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
மத்திய கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல்லில் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் கணக்கு மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கான (Guest and Part Time) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கணக்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கணிதம் அல்லது அப்ளைட் கணிதம் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் எம்எஸ்சியுடன் பிஎச்டி அல்லது நெட், ஸ்லெட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தமிழில் எம்ஏ, பிஎச்டி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நெட், ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஎச்டி அல்லது பட்டமேற்படிப்புடன் நெட், ஸ்லெட் தேர்வை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் பணியில் 2 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழத்தில் நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணலுக்கு வருவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்க பூர்த்தி செய்து கொண்டு வர வேண்டும். அதோடு உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications