மத்திய அரசு பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏகலவ்யா பள்ளிகளில், பள்ளி முதல்வர் முதல் ஆய்வக உதவியாளர் வரை பல்வேறு பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்பபடுகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஏகலவ்யா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள், மாதிரி உண்டு உறைவிட பள்ளியாகும். மத்திய அரசின் தேசிய பழங்குடியினர் நலக் கல்விச்சங்கத்தின் கீழ் பழங்குடியினருக்காக இந்த பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில வழியில் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளிகள் நாட்டில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் அமைக்கப்படும். தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் குழந்தைகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.

eklavya-school-recruitment-2025-jobs-available-from-12th-pass-to-postgraduates

தமிழ்நாட்டில் வெள்ளிமலை, - அபிநவம் (சேலம்), ஏற்காடு; நாமக்கல் மாவட்டம் செங்கரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர்நாடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மு.பலாடா உள்பட 8 பள்ளிகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள ஏகலவ்யா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

முதல்வர் - 225
PGTs - 1460
TGTs - 3962
பெண் பணியாளர் செவிலியர் - 550
விடுதி வார்டன் - 635
கணக்காளர் - 61
ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) - 228
ஆய்வக உதவியாளர் - 146

கல்வித் தகுதி:

முதல்வர் (Principal) பணிக்கு முதுகலை பட்டத்துடன் B.Ed அல்லது அது சார்ந்த படிப்புகள் படித்து இருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். பணி அனுபவமும் அவசியம். ஆசிரியர் பணியிடத்திற்கு துறை சார்ந்த பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

அதாவது, TGT ஆங்கில ஆசிரியர் பணிக்கு ஆங்கிலத்தை முதன்மையாக கொண்ட பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். ஆசிரியர் தகுதிக்கான படிப்புகளும் முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு (23.10.2025 கணக்கின் படி):

முதல்வர் - 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
PGTs - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TGTs - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண் பணியாளர் செவிலியர் - 35
விடுதி வார்டன் - 35
கணக்காளர் - 30
ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) - 30
ஆய்வக உதவியாளர் - 30

அரசு விதிகளின் படி வயது உச்சவரம்பில் சலுகைகளும் உண்டு.

சம்பளம் எவ்வளவு?

முதல்வர் - ரூ.78,800,-,2,09,200/-
PGTs - ரூ.47,600 - 1,51,100/-
TGTs - ரூ.44,900 - 1,42,400/-
பெண் பணியாளர் செவிலியர் - ரூ.29,200 - 92,300/-
விடுதி வார்டன் - ரூ.29,200 - 92,300/-
கணக்காளர் - ரூ.35,400 - 1,12,400/-
ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) - ரூ.19,900 - 63,200/-
ஆய்வக உதவியாளர் - ரூ.18,000 - 56,900/-

தேர்வு முறை:

டைர் 1 & 2 தேர்வு மற்றும் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கட்டணமாக முதல்வர் (Principal) பணிக்கு ரூ.2,500, PGT & TGT பணிகளுக்கு ரூ.2,000, ஆசிரியர் அல்லாத பணிக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23.10.2025 கடைசி நாளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+