படித்த இளைஞர்களே முதலாளியாக சூப்பர் வாய்ப்பு.. லட்சங்களை அள்ளி தரும் தமிழக அரசு.. உடனே பாருங்க
நாகர்கோவில்: மக்களுடன் முதல்வர் முகாமில் தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள், பங்குபெற்று 25 சதவீத மானியத்தில் கடன் பெறலாம் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
மக்களுடன் முதல்வர் முகாம் தமிழகம் முழுவதுமே நடக்கிறது. இந்த முகாம்களில் பங்கேற்போருக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. உடனுக்குடன் குறைகளை தீர்த்து வைக்கிறார்கள். சிக்கலான பிரச்சனைகள் குறிப்பிட்ட நாளில் தீர்த்துவைக்கிறார்கள். இந்நிலையில் இந்த முகாம்களில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் பங்குபெற்று மானிய கடன் பெற்று தொழில் தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனில் 25 வரை மானியமும் அரசு தருகிறது என்பது தான் கூடுதல் சிறப்பு.

இது பற்றி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்டம் முழுவதும் வருகிற ஜனவரி 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் கீழ்கண்ட சிறப்பான கடன் திட்டங்களை தமிழக அரசு, மாவட்ட கலெக்டரின் தலைமையில் செயல்படுத்தி வருகிறது.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரையிலும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (உச்சவரம்பு ரூ.75 லட்சம்) மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சம். மானியம் 25 சதவீதம். இதில் விண்ணப்பிக்க 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 55-க்குள் இருக்க வேண்டும்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கல்வித்தகுதி இல்லாதவர்கள் சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் பெற விண்ணப்பிக்கலாம். 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவை தொழிலுக்கு ரூ.20 லட்சமும், உற்பத்தி தொழிலுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் கடன் பெற விண்ணப்பிக்கலாம். கிராமப் புறங்களில் அதிகபட்ச மானியம் 35 சதவீதம்.
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சத்திற்கு மேலும் சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
மேற்கண்ட கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க விலைப்புள்ளி, ஆதார்கார்டு, நிழற்படம், கல்வி, சாதிச்சான்றிதழ் மற்றும் உத்தேச விலைப்பட்டியலுடன் வருபவர்களுக்கு விரைந்து வங்கிகளுக்கு கடன் மானியத்துடன் பரிந்துரை செய்யப்படும். எனவே மக்களுடன் முதல்வர் முகாமில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்க முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications