12ம் வகுப்பு முடித்தாலே போதும்.. மாத ஊதியம் 25,500 டூ 92,300.. இபிஎப் துறையில் பணியாற்ற வாய்ப்பு
டெல்லி: இபிஎப்ஓ நிறுவனத்தில் காலியாக உள்ள 2,859 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரை வழங்கப்பட உள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees Provident Fund Organisation or EPFO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

இபிஎப்ஓவில் தற்போது சோசியல் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (Social Security Assistant) பணிக்கு 2,674 பேர், ஸ்டெனோகிராபர் (Stenographer) பணிக்கு 185 பேர் என மொத்தம் 2,859 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சோசியல் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி முடித்தவர்களும், ஸ்டெனோகிராபர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் சோசியல் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணிக்கு நிமிடத்துக்கு 35 ஆங்கில வார்த்தைகளும், இந்தி என்றால் நிமிடத்துக்கு 30 வார்த்தைகளும் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சோசியல் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,200ம், அதிகபட்சமாக ரூ.92,300ம் சம்பளம் செய்கிறது. ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.25,500ம் அதிகபட்சமாக ரூ.81,100 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சமாக 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 26.04.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.epfindia.gov.in இணையதளம் மூலம் மார்ச் 27 ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, இடபிள்யூஎஸ், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் தேர்வு, நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications