பிரபல வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அடித்தது யோகம்.. நல்ல சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: ஃபெடரல் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.4.59 லட்சம் முதல் அதிகபட்சமாக 6.19 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
நாட்டின் பிரபல தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி கடந்த 1931 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வங்கியில் தற்போது 15,212 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 14,604 பேர் முழுநேர பணியாளர்கள், 608 பேர் பகுதி நேர பணியாளர்கள் ஆகும். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 222 கிளைகளையும், இதில் சென்னையில் மட்டும் 33 கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
தற்போது இந்த வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபெடரல் வங்கியில் அசோசியேட் ஆபீஸர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் எல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஃபெடரல் வங்கியில் அசோசியட் ஆபீசர்( விற்பனை) Associate Officers (Sales) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு என படித்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடங்களை பொறுத்து சம்பளம் வேறுபடும். குறைந்தது ஆண்டுக்கு ரூ.4.59 லட்சம் முதல் அதிகபட்சமாக 6.19 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் காப்பீடு செய்யப்படுவர். இதேபோன்று பணிக்கொடை, சலுகை வட்டி விகிதத்தில் கடன், மருத்துவ காப்பீடு என பல சலுகைகள் வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ் சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆப்டிடியூட் ட்டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையத்தை பொறுத்தவரை தமிழத்தில் சென்னை, கோவை மற்றும் சேலத்தில் அமைக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.federalbank.co.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ.350 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 10.06.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2025 ஆகும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ள: https://www.federalbank.co.in/documents/d/guest/notification-1
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications