அனுபவம் வேண்டாம்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை.. 2024ல் படிப்பை முடித்தோருக்கு நல்ல சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் எதுவும் தேவையில்லை. 2024ம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையிலேயே வேலை செய்யலாம்.
எச்சிஎல் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணி குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி (Post Graduate Engineer Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்னர். இந்த பணிக்கு பிடெக், பிஇ படிப்புகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு முக்கிய கண்டிஷன் உள்ளது. அதாவது 10, பிளஸ் 2 மற்றும் பிஇ, பிடெக் படிப்புகளை குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் எதுவும் இருக்க கூடாது. CAD சர்ட்டிபிகேட் முக்கியமாக வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் ஒன்று சென்னை. மற்றொரு இடம் நொய்டா. இதனால் விண்ணப்பம் செய்வோருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சென்னையிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்பு என்பது கிடைக்கலாம்.
தற்போதைய அறிவிப்பில் மாதசம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications