டிகிரி அல்லது டிப்ளமோ போதும்.. தூத்துக்குடியில் பணி நியமனம்.. அழைக்கும் HCL
தூத்துக்குடி: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இதுதவிர எச்சிஎல் பல்வேறு தொழில் சார்ந்த விஷயங்களுக்கான Procurement பணிக்கு பிற மாவட்டங்களிலும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் எச்சிஎல் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான முழு விபரங்கள் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Procurement Executive பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரிஅல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ARIBA டூல் (e-rfx) மற்றும் ARIBA my procure Module பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதுதவிர Procurement பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர database of Vendors, Market trends Vendor Management & Development பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இதுதவிர MS Office, Outlook, PowerPoint, Excel, SAP, Ariba பற்றிய புரிதல் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடியில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications