+2 போதும்.. ரூ.2.8 லட்சம் ஊதியத்தில் வேலை..செப்.,30, அக்.,1ல் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிளஸ் 2 அல்லது டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது சென்னையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னைய நாவலூர், சோழிங்கநல்லூரியில் நியமனம் செய்யப்படுவதோடு ரூ.2.8 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
உலகில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். எச்சிஎல் டெக் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எச்சிஎல் நிறுவனம் என்பது சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Process for Banking Sector (Freshers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். இந்த பணிக்கு முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தாரர்கள் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2 படிப்பை முடித்து 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர விண்ணப்பத்தாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். Clint-க்கு வாய்ஸ் மற்றும் இ-மெயில் மூலம் பதிலளித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூர்/சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணியை பெறும் நபர்கள் அலுவலகத்தை சுற்றி 20 கிலோமீட்டருக்குள் வசிக்க வேண்டியிருக்கும். Cab வசதி இருக்கும். வீட்டில் இருந்து பிக்அப், டிராப் சேவை உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாகும். இருப்பினும் பிரிட்டன் ஷிப்ட் (UK Shift) வகையில் ரோட்டேஷனல் முறையில் பணியாற்ற வேண்டியிருக்கும். மாதசம்பளமாக ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதி, அக்டோபர் 1ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த 2 நாட்களும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இண்டர்வியூ என்பது சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. HCL ETA-1 - Villagae and Panchayat, ETA - Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Chegalpattu, Tamil nadu 603 103 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications