சென்னையில் ஐடி வேலை.. எச்சிஎல் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. டிச., 23-24ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சில் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணி தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:

எச்சிஎல் நிறுவனம் சார்பில் Walkin Interview Financial Crime Operations & QA in Fincrime என்ற பெயரில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அனலிஸ்ட் & சீனியர் அனலிஸ்ட் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது Financial Crime Operations பணிக்கு 2 முதல் 3 ஆண்டு வரை Due Diligence, Enhanced due Diligence மற்றும் Reviewing suspicious account activity பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். அதேபோல் KYC, AML, CDD கொள்கைகள் மற்றும் பயிற்சி பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
மேலும் QA in Fincrime பணிக்கு எண்ட் டூ எண்ட் பைனான்சியல் கிரைம் பேக்எண்ட் ஆபரேஷன்ஸ் மற்றும் குவாலிட்டி அசூரன்ஸ் மேனேஜ்மென்ட், எக்ஸல், பவர் பிஐ பயன்படுத்தும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் கேஒய்சி, டிரான்ஸக்சன் மானிட்டரிங், பிஇபி ரிவ்யூ, ஓடிடி ரிவ்யூ-வில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் AMLD/OFAC/FATF உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.குறிப்பாக பிரிட்டன் ரோட்டேஷ்னல் ஷிப்ட் தான் இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies Ltd. ETA 1- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஐடி கார்டு உள்ளிட்டவற்றை இண்டர்வியூவுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications