80000க்கு மேல் சம்பளம்... பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கு அருமையான சான்ஸ்
டெல்லி: பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 23ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இந்தியா முழுவதும் சுமார் 10,189 கிளைகள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி என்பதால் பல லட்சம் கோடி வணிகம் கொண்ட வங்கியாகும் டெல்லியை தலைமையிடமாக கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில், நாடு முழுவதும் சுமார் 1,02,746 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த எண்ணிக்கை சற்று மாறுபடலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள லோக்கல் பேங்க் ஆபீசர் பதவிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 750 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொதுவாக இவர்களுக்கான சம்பள விகிதம் என்பது ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்-I பிரிவின் கீழ் வரும். எனவே
இந்த பதவிக்கான ஆரம்ப அடிப்படைச் சம்பளம் தோராயமாக ரூ.48,480/- ஆக இருக்கும். அதேநேரம் அலவன்ஸ்கள் (HRA, DA, CCA போன்றவை) மற்றும் பிற சலுகைகளைச் சேர்த்தால், ஆரம்ப நிலையில் உள்ள ஒரு அதிகாரிக்கு மொத்த சம்பளமாக ஒரு மாதத்திற்கு ₹80,000 முதல் ₹85,920 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
எனினும் சம்பள விகிதங்கள், பணியிடத்தின் நகரம், அலவன்ஸ்களின் மாறுபாடுகள் மற்றும் லேட்டஸ்ட் ஊதிய திருத்தங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்பதால் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மனித வளத்துறை வெளியிட்ட விளம்பரத்தில் உள்ள தகவல்களை அப்படியே பார்ப்போம்.
பதவியின் பெயர் :லோக்கல் பேங்க் ஆஃபிஸர் (JMG Scale - I)
காலியிடங்கள்:750
வயது வரம்பு (01.07.2025 நிலவரப்படி):குறைந்தபட்சம்: 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கட்டாயத் தகுதி / மொழித் திறன் / அனுபவம்:
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் (23.11.2025 ங
மொழித் திறன்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் குறிப்பிட்ட உள்ளூர் மொழியில் (படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல்) திறமை பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் அல்லது அதிகாரிப் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பதவிக் காலத்திற்குப் பிந்தைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத் தேதி விவரங்கள்
விண்ணப்பங்களை சமர்பிக்கும் முறை: ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 03.11.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2025
மேலும் விவரங்களுக்கு: வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pnb.bank/in/recruitment.aspx -ஐப் பார்க்க வேண்டும்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications