பொதுத்துறை வங்கிகளில் வேலை.. ஐபிபிஎஸ் வெளியிட்ட மெகா அறிவிப்பு! தேர்வர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 5208 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளமாக வழங்கப்படும்.
இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக நிரப்பப்படுகிறது. அந்த வகையில் கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்பட முன்னணி வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி தவிர்த்து இதர பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் ஐபிபிஎஸ் மூலமே நடத்தப்படுகிறது.
இதனால், வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் ஐபிபிஎஸ் வெளியிடும் தேர்வு அறிவிப்புக்காக காத்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடியும். வங்கி பணிகளுக்காக மாதக்கணக்கில் தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலம்.
பணியிடங்கள் விவரம்:
புரொபேஷனரி அதிகாரி/ மேனேஜ்மெண்ட் டிரெய்னி (PO/MT) - பதவிகளில் 5208 - பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. வங்கிகள் வாரியாகவும் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,
பேங்க் ஆஃப் பரோடா - 1000
பேங்க்ஆஃப் இந்தியா - 700
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 1000
கனரா வங்கி - 1000
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (சிபிஐ) - 500
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450
பஞ்சாப் நேஷனல் வங்கி - 200
பஞ்சாப் & சிந்து வங்கி - 358
இந்தியன் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் எத்தனை காலிப்பணியிடங்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 நிலவரப்படி, 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.7.1995 க்கு முன்பாகவோ, 01.07.2005 க்கு பிறகோ பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது.
எனினும், அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எஸ்.எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் கிடைக்கும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதநிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலை தேர்வு சென்னை, கோயம்புத்தூர், கடலூர் ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.
மெயின் தேர்வுகள் சென்னை, கோவை மதுரை, நாமக்கல் சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களிலும் நடைபெறும். நாடு முழுவதும் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ175 விண்ணப்ப கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 21.7.2025 கடைசி தேதியாகும்.
முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியாகும். மெயின் தேர்வு அக்டோபரில் நடைபெறும். தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்படும். தேர்வர்களுக்கு ஜனவரி/ பிப்ரவரியில் பணி நியமனம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/index.php/management-trainees-xv/












Click it and Unblock the Notifications