நோ எக்ஸாம்.. 10 டூ டிகிரி முடித்தவர்களே சூப்பர் வாய்ப்பு.. சென்னை என்ஐஆர்டி-யில் அரசு பணி! செம
சென்னை: மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Reserch or ICMR) செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் கீழ் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்கி வருகிறது.

காலியிடங்கள்: சென்னை என்ஐஆர்டி-யில் மொத்தம் 81 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு 68 பேர், லேப் அசிஸ்டென்ட் I பணிக்கு 13 பேர் என தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை டிகிரி, என்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்து ஆய்வகத்தில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் வகுப்பு முடித்து சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன: இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். லேப் அட்டென்டென்ட் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications