Gold Rate Today: காலையிலேயே அதிர்ச்சி.. மீண்டும் எகிறிய தங்கம் விலை.. யாரும் எதிர்பார்க்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சம் மார்கெட்டில் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையே திடீரென இன்று காலை சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே உயராமல் தொடர்ந்து சரிந்தே வருகிறது. தங்கம் விலை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக வளைகுடாவில் நிலவும் பதற்றமும் அமெரிக்க விலைவாசியும் தங்கம் விலையை நேரடியாக பாதிக்கிறது.

Gold Price Gold

சர்வதேச மார்கெட்

சர்வதேச மார்கெட்டில் நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை ஓரளவுக்கு உயர்ந்தாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் சரிந்துள்ளது.. அதிலும் குறிப்பாக கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக பெரியளவில் தங்கம் சரிந்துள்ளது. அதேபோல கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,996.90 டாலராக வர்த்தகமானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஜூன் மாத பணவீக்க டேட்டா வெளியானது. அதில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக இல்லை. இருப்பினும், மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்துள்ள போர் தங்கத்தை பாதாளத்திற்கு தள்ளுகிறது. அமெரிக்கா - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே வாரத்தில் சுமார் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

பணவீக்கம்

எண்ணெய் விலை உயர்வது சர்வதேச அளவில் பணவீக்கத்தை கொண்டு வரும். இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். வட்டி விகிதம் அதிகரிக்கும் போது தங்கம் விலை சரியும். எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தங்கம் விலை வீக்காவே இருக்கிறது.

அதேநேரம் டாலரில் தங்கம் விலை பெரியளவில் சரிந்தாலும் இந்தியாவில் அதே அளவுக்கு குறைவதில்லை. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கணிசமாக சரிந்து வருகிறது. இதனால் தங்கத்தை இறக்குமதி செய்ய ஆகும் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் ரேட் குறைந்தாலும் இந்தியாவில் அதே அளவுக்கு தங்கம் விலை குறைவதில்லை.

தங்கம்

நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை இன்று கணிசமாக சரிந்தது.. ஆபரண சங்கம் ஒரு சவரன் ரூ.400 குறைந்து, இன்று ரூ.1,04,800க்கு விற்பனையானது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.13,100க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.235க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ. 1,05,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.13,135க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 235க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் - கடந்து வந்த பாதை

18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080

17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800

16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440

14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600

12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+