சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி! உடனடியாக உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கரப்பான் பூச்சி கட்சி தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் இப்போது 21வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு போய் இருக்கும் நிலையில், இன்று காலை டெல்லி போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கல்வி அமைப்பில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சோனம் வாங்சுக் ஜூன் இறுதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் இணைந்த அவர், 21 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறது.

Sonam Wangchuk neet delhi protest

டெல்லி போலீஸ்

இந்தச் சூழலில் தான் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் இப்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை காலையில் போராட்ட களத்திற்கு வந்த டெல்லி போலீஸ், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மருத்துவமனையில் அனுமதி

இன்று காலை திடீரென போராட்ட களத்திற்கு வந்த போலீசார், சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலில் அவரை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்பதில் தெளிவான தகவல்கள் இல்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் குழப்பமடைந்தனர். இதையடுத்தே வாங்சுக் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது..

என்ன நடந்தது

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சோனம் வாங்சுக் இன்று காலை 7.40 மணிக்கு சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாலும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் அவர் உடல் பலவீனமடைந்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், அவருக்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது" என்றும் மருத்துவமனை மேலும் கூறியது.

உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவ ஆலோசனையின்படியே வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

கண்டனம்

அதேநேரம் டெல்லி போலீசார் நடவடிக்கைக்கு வாங்சுக் மனைவி கீதாஞ்சலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக இருந்தால் அதற்கு அளிப்பதற்கு முன் மருத்துவர்கள் தன்னிடமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும், "வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நான் இருக்கிறேன். எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவருக்கு எந்தவொரு மருந்தும் அல்லது சிகிச்சையும் அளிக்கப்படக்கூடாது. நேற்று அவர் நலமாகவே இருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

பிரதமர் பதவி விலகணும்

சோனம் வாங்சுக் போராட்ட களத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டதற்கு கரப்பான் பூச்சி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து அந்த கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும், இத்தனை காலம் தாங்கள் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்தி வந்ததாகவும் ஆனால் இன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+