இனி 6 மாதத்துக்கு திமுக பக்கமே சிபிஐ, அமலாக்கத்துறை வராது.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் உறுதி.. அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் அரசியல் மாற்றம் வரும். திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்கத் தான் போகிறார்கள். இனி அடுத்த 6 மாதத்திற்கு அமலாக்கத்துறை, சிபிஐ திமுக பக்கமே வராது. திமுக முன்னாள் அமைச்சர்கள் இனி புனிதர்களாக மாற்றப்படுவார்கள் என்று வி த லீடர் அமைப்பு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் வலுவில்லாத எதிர்க்கட்சியாக உள்ளது என்றும், எல்லாம் முடிந்த பிறகு ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

நாளை நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் மு.க ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை வருகை தந்தனர்.

Annamalai says next 6 months CBI ED will not Raid DMK political shift wll be in Tamil Nadu is certain

மு.க ஸ்டாலினை நேரில் அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பேசியபோது காங்கிரஸ் கோரிக்கையினை திமுக நிராகரித்தது. தமிழ்நாட்டு நலன் கருதி இந்த நிலைப்பாட்டை எடுத்து இருப்பதாகவும், நியாயமான மறுவரையறையை ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டிற்கு எதிரான எந்த ஒரு முடிவையும் திமுக ஒரு காலத்திலும் எடுக்காது.. என்று தெரிவித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அண்ணாமலை கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி வலுவிழந்து உள்ளது. எதிர்க்கட்சியாக அந்த கட்சியால் செயல்பட முடியவில்லை. சும்மாவே பாஜக சிக்சர் அடிக்கும். இவர்கள் இப்படி இருப்பதால்தான் பாஜக வெளுத்து வாங்குகிறது. இப்போது கூட தொகுதி மறுவரையறை மசோதாவில் காலம் கடந்த பிறகு தான் திமுகவையே வந்து சந்திக்கிறார்கள்.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த மசோதா நிறைவேறிய பிறகு கண்டிப்பாக அமைச்சரவையில் மாற்றம் வரும். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒருத்தர் அமைச்சராக வருவார்.

எப்போதும் பாஜக கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக இப்போது ஆதரவு அளிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் இனி புனிதர்களாக மாறிவிடுவார்கள். திமுக பக்கமே இனி சிபிஐ வராது. அமலாக்கத்துறை வராது. அடுத்த ஆறு மாதத்திற்குள் இது எல்லாம் நடக்கும். திமுக ஒன்னும் மகாத்மா காந்தி கிடையாது. அவங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பெற்றுவிட்டு தான் செய்யுறாங்க..

வி த லீடர்ஸ் அமைப்பை பொறுத்தவரைக்கும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும். நிச்சயமாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்.. திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்கத் தான் போகிறார்கள். அதை நீங்களும், நாங்களும் பார்க்கத் தான் போகிறோம். என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+